அரசு பள்ளியில் மது விருந்து: விசாரணைக்கு உத்தரவு

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (53)
Advertisement
 உ.பி.,UP, அரசு பள்ளி,Govt school, மது விருந்து,dance bar, Wine party, விசாரணை,Investigation, லக்னோ,  Lucknow , உத்தர பிரதேசம், Uttar Pradesh,பிறந்த நாள் கொண்டாட்டம், birthday celebration,வீடியோ, video,சமூக வலைதளங்கள்,social network, ரக்ஷா பந்தன் பண்டிகை,Raksha Bandhan festival, அரசு விடுமுறை, government holiday, மிர்சாபூர் ,Mirzapur, அரசு தொடக்கப் பள்ளி, government primary school,நண்பர்கள், friends,

லக்னோ: உத்தர பிரதேசத்தில், அரசுப் பள்ளியில், மது விருந்துடன், பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மது விருந்து:

சகோதரத்துவத்தை வலியுறுத்தும், ரக் ஷா பந்தன் பண்டிகை, 7ல், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வட மாநிலங்களில், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உ.பி., மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தின் தலைவர், தன் மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டார். அங்குள்ள, அரசு தொடக்கப் பள்ளியின் சாவியை கேட்டுப் பெற்ற அவர், அந்த பள்ளியில், தன் நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு, மது விருந்தளித்தார்.


விசாரணைக்கு உத்தரவு:

அப்போது, பெண்களின் ஆபாச நடனமும் இடம் பெற்றது. விருந்தில் பங்கேற்றவர்கள், பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடியதுடன், ரூபாய் நோட்டுகளை வீசினர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வெளியானது; விசாரணை நடத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஆக-201717:15:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆபாச நடனம் இல்லை, ஆனால் மகா குத்து யோகாசன பயிற்சி முகாம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
11-ஆக-201717:13:07 IST Report Abuse
Karuthukirukkan ஆட்சியின் 60 நாளில் 2000 கடத்தல் 900 கொலைகள் .. அப்பறோம் எப்பிடி விளங்கும் .. இதுல இங்கே அல்லக்கைகளுக்கு ஜி நம்ம மாநிலத்துல இல்லையேன்னு வருத்தமாம் ..
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
11-ஆக-201716:52:07 IST Report Abuse
srisubram சென்னையில் பள்ளிக்கூடத்துல இந்த மாதிரி நடக்காது .. மேலும் இங்குள்ளவர்கள் நாங்கள் யோகிகள் என்று வேஷம் போடுவதில்லை . நாங்கள் பகுத்தறிவு சிங்கங்கள் .. பார் இருக்கு , வீடு இருக்கு .. ஹோட்டல் இருக்கு . பள்ளிக்கூடம் எதுக்கு ? அப்புறம் பள்ளியில் என்ன ஆபாச நடனம் ஆடி, ரூபாய் நோட்டை மாலையாக போடுதல் ? அப்ப உங்கள் ஆளுங்களே கிளீன் நோட் விதிகளை பின்பற்றுவதில்லையே ..இதெல்லாமா சங்க பரிவார் அமைப்பு சொல்லுது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X