துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கையா நாயுடு

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (13)
Advertisement
துணை ஜனாதிபதி,Vice president, வெங்கையா நாயுடு, ஜனாதிபதி, President, ராம்நாத்கோவிந்த்,Ramnath Govind, பதவியேற்பு, புதுடில்லி, New Delhi, பதவிப்பிரமாணம், ஹமீத் அன்சாரி,Hamid Ansari,  காங்கிரஸ் , Congress, கோபாலகிருஷ்ண காந்தி,Gopalakrishna Gandhi, தேசிய ஜனநாயக கூட்டணி , National Democratic Alliance, பா.ஜ மூத்த தலைவர் அத்வானி, BJP senior leader LK Advani,அமித்ஷா,Amit Shah, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy, மத்திய அமைச்சர்கள், Union Ministers, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், Former Prime Minister Manmohan Singh, டில்லி ராஜ்காட்,Delhi Rajkot, மகாத்மா சமாதி, Mahatma Tomb

புதுடில்லி: நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று 11 ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


வெற்றி:

துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நேற்றுடன்(ஆகஸ்ட் 10) முடிவடைந்தது. இதனையடுத்து நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியை விட 244 ஓட்டுகள் அதிகம் பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார்.


பதவியேற்பு:

தொடர்ந்து, அவர் துணை ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணியளவில் நடந்த விழாவில், அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வெங்கையா நாயுடு, டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Murugan - Puducherry,இந்தியா
11-ஆக-201718:59:12 IST Report Abuse
Murugan வாழ்த்துக்கள் , ஜனநாயக மாண்பை காப்பது உங்களது கடமை
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஆக-201713:32:09 IST Report Abuse
Lion Drsekar தன்னுடன் பணியாற்றும் சக அமைச்சரை பொன்னார் அவர்களை அவமானப்படுத்திய பிறகு இவர் மீது இருந்த மரியாதை போய்விட்டது, நான் எந்த ஒரு கட்சிக்காரனும் இல்லை, மனித நேயம் கொண்டவன், ஒரு இந்தியன், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஆக-201714:36:29 IST Report Abuse
Nallavan Nallavanஅந்த வீடியோவை நான் இன்றுதான் பார்த்தேன் ..... நாயுடுவின் செயலில் அலட்சியம் இருந்தது ..... ஆனால் அவமானப்படுத்தும் நோக்கத்தில் செய்திருக்க வாய்ப்பில்லை ..... இதை இந்து இயக்கவாதிகளோ, கட்சி சார்பற்றவர்களோ பெரிது படுத்தவில்லை .... வீடியோவிலேயே சற்று வருத்தத்துடன் பொன்னார் அகன்று விட்டார் .... இதை முன்னிட்டு குய்யோ, குலையோ என்று புலம்புவோர் ஹமீது அன்சாரியால் பாதுகாப்பில்லாதவர்கள் என்று குறிப்பிடப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே .......
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-ஆக-201712:53:45 IST Report Abuse
Pasupathi Subbian ஆரம்பமே அதிரடி, இனி கட்சி விஷயம் பேசமாட்டேன் . எனது பதவி கட்சி பாகுபாட்டிற்கு அப்பாற்பட்டது . பொதுவானது என்று கூறிவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X