விவசாயி மகன் வெங்கையாவுக்கு பிரதமர் புகழாரம்| Dinamalar

விவசாயி மகன் வெங்கையாவுக்கு பிரதமர் புகழாரம்

Updated : ஆக 11, 2017 | Added : ஆக 11, 2017 | கருத்துகள் (2)
VicePresident, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு,  பிரதமர் மோடி, பாராட்டு

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக பதவியேற்ற வெங்கையாநாயுடு, ராஜ்யசபா அவை தலைவராக பொறுப்பேற்று அவையை நடத்தி வருகிறார்.
அவரை பாராட்டி பிரதமர் மோடி பேசியதாவது: துணை ஜனாதிபதி சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்தவர். அவர் பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. விவசாயி மகன். ஏழைகள் பிரச்னைகளில் கவனம் செலுத்தியவர். நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் பங்கெடுத்துள்ளார் அவர் மாநில அரசியல்மற்றும் மத்திய அரசில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இன்று சாமான்யர்கள் உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
வெங்கையா நாயடு தனது வழியில் சிறப்பாக பணிபுரிந்தவர். கடினமாக உழைப்பவர் என எதிர்க்கட்சிகள் பாராட்டியுள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X