நீட் தேர்வு: தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (50)
Advertisement
நீட் தேர்வு, சுப்ரீம் கோர்ட், Supreme Court,தமிழக அரசு, Tamil Nadu Government,  மேல்முறையீடு,  Appeal, புதுடில்லி,  New Delhi, மருத்துவ படிப்பு, Medical Courses, சிபிஎஸ்இ, CBSE, மாணவர்கள் வழக்கு , Students Case,நீதிபதிகள் , Judges,சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி, Supreme Court dismissed

புதுடில்லி: நீட் தேர்வில், தமிழக பாடதிட்டத்தில் 85 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. மாநில பாட திட்டம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் என மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது. சமநிலை முறை வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. வேறுபாட்டை அதிகபடுத்தும் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-ஆக-201711:50:49 IST Report Abuse
Panneerselvam Chinnasamy உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்யப்பட்ட தால்தான் நீட் தேர்வு முறையே அமுலாக்க பட்டது... எனவே உச்ச நீதிமன்றம் தான் போட்ட உத்தரவை எப்படி மாற்றி சொல்லும்...? நிர்வாக ரீதியாக தூங்கிவிட்ட அதிமுக ஆட்சியால் தமிழக மாணவர்கள் எதிர்காலம் பாழாக கூடாது என்ற தார்மீக அடிப்படையில் மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க ஒரு உத்தரவு போடுமா ? இல்லை தமிழ்நாட்டு சட்டசபை தீர்மானத்தை சட்டம் ஆக்குமா? என்னதான் நடக்கிறது டில்லியில்...?
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
11-ஆக-201722:37:00 IST Report Abuse
Rajathiraja நீதி செத்துவிட்டதாகவே தெரிகிறது. அது எப்படி ஒரு மாநிலத்தில் இல்லாத பாடத்திட்டத்திலிருந்து தேர்வை நடத்தி அதன்மூலம் தேர்வு செய்வீர்கள். CBSE இந்த வருடம் கேள்வித்தாளில் பாரபட்சம் காட்டியுள்ளதை நீதிமன்றம் ஒத்துக்கொள்கிறது ஆனால் அதை தண்டிக்கவோ அல்லது தடுக்கவோ முடியாதாம். அப்படியென்றால் நீதி செத்துவிட்டதாகவே பொருள்.
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
12-ஆக-201720:19:18 IST Report Abuse
N.Kநாளை நீங்கள் மருத்துவரிடம் செல்லும்பொழுது உங்கள் உடலின் நோயின் அறிகுறி அவர் பாடத்திட்டத்தில் இல்லைஎன்று சொல்லி திருப்பி அனுப்பி விடட்டும்...
Rate this:
Share this comment
Cancel
11-ஆக-201720:29:45 IST Report Abuse
kulandhaiKannan TN Govt should demand NEET exemption govt. medical colleges. Other colleges should be brought under NEET with certain quota for the managements
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X