அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக நலனுக்காக துணிச்சலான முடிவு: தினகரன்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (35)
Advertisement
தினகரன், Dinakaran, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, அதிமுக,ADMK, தஞ்சாவூர், Thanjavur,டிடிவி தினகரன் ,TTV Dinakaran,பத்திரிகையாளர்கள், Journalists,எம்ஜிஆர், MGR, ஜெயலலிதா ,Jayalalithaa, சசிகலா, Sasikala, காவல்துறை, Police, ஓ.பி.எஸ்.,OPS, ஈ.பி.எஸ்., EPS, ஸ்டாலின்,Stalin, துணை பொது செயலர் ,Deputy General Secretary, துணை ஜனாதிபதி, Vice President

தஞ்சாவூர்: அதிமுகவின் நலனுக்காக துணிச்சலாக எந்த முடிவையும் எடுப்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பத்திரிகையாளர்கள் பரபரப்புக்காக பதில் சொல்ல முடியாது. அதிமுக மாபெரும் மக்கள் இயக்கம். எம்ஜிஆர் 1972ல் தொடங்கி, 15 ஆண்டுகள் சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார். ஆட்சி பொறுப்பில் 10 வருடங்கள் இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு இரண்டுபட்ட கட்சியை, ஒன்றுபடுத்தி ஜெயலலிதா வளர்ச்சி பாதையில் கட்சியை கொண்டு சென்றார். இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், இந்த இயக்கம் சீரோடும், சிறப்போடும் செயல்படும் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதாவின் வாக்கை அந்த கூற்றை, நம்பிக்கையை நிச்சயம் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உள்ளது. அதில் சிறப்பாக செயல்பட்டு தலை சிறந்த இயக்கமாக இருக்க என்ன தேவையோ அதனை நிச்சயம் செய்வோம்.


முயற்சி:

இதற்காக என்னை துணை பொது செயலராக சசிகலா நியமித்தார். கட்சியில் உள்ள பல்வேறு பொறுப்பாளர்கள் பல்வேறு தொண்டர்களுடன் இணைந்து, இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என சசி எனக்கு இட்ட உத்தரவு. இதில் மாறாமல் கட்சி சிறப்பாக வளர்வதற்கு என்னால் ஆன முயற்சி செய்வேன். சில நண்பர்கள் பயம், சுயநலம் காரணமாக சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என சொல்கின்றனர். தவறு செய்தவர்கள் மீது பயமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அனுமதி மறுத்தாலும் மேலூரில் கூட்டம் நடக்கும். இதனை பொறுத்திருந்து பாருங்கள்.


துணிச்சலாக:

தேர்தல் ஆணைய உத்தரவை மீறி தீர்மானம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால் பதவி பறிபோகும்.பொருளாளர் பதவி செல்லும் போது துணை பொது செயலர் பதவி ஏன் செல்லாது. துணை ஜனாதிபதி பதவியேற்பில் எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு பதில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., பங்கேற்றுள்ளனர். அதிமுக நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன்.


பயம்:


திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து சசி முடிவு செய்வார். ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வரும் போது அப்போது முடிவு செய்யப்படும். கட்சிக்கு நன்மை ஏற்படும் என்றால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயார். ஆட்சியும், கட்சியும் இரட்டை தண்டவாளங்கள். தடம் மாறாமல் சென்றால் ஆட்சிக்கு பிரச்னை வராது. 5 ஆண்டு ஆட்சி நீடிக்குமா என்பதை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேட்க வேண்டும். அதிமுக நலனுக்காக எதையும் செய்ய தயார். பயத்தின் காரணமாக சிலர் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.


காத்திருப்பு:

ஆட்சியும், கட்சியும் அதிமுகவிடம் உள்ளது. தனி நபரிடம் இல்லை. 2021ல் அதிமுகவில் ஆட்சியமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நீட் தேர்வு விலக்கிற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் முயற்சி செய்து வருகிறார். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. லோக்சபா தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பிரிந்து சென்றவர்கள் எங்களிடம் வருவார்கள். அதற்காக காத்திருக்கிறோம்.லோக்சபா தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.பொதுக்குழுவை கூட்டாமல் யாரையும் நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. பொதுக்கூட்டத்தில் பிரச்னை குறித்து அனைத்து விவரங்களையும் தெரிவிப்பேன். இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
manivannan - chennai,ஆஸ்திரேலியா
12-ஆக-201704:45:03 IST Report Abuse
manivannan சிங்கப்பூர் ஓடலாம் முடியாது.. இந்தியாவில் பாஸ்போர்ட் முடக்கம். தவிர சிங்கப்பூர் பிரைம் மினிஸ்டர் இதை எல்லாம் கேள்விப்பட்டு தன பதவிக்கு கெட்ட காலம் என்று பயந்து சிடிஸின் ஷிப் ஐ ஏ கான்செல் செய்ய யோசித்து வருகிறாராம்.
Rate this:
Share this comment
Cancel
Arachi - Chennai,இந்தியா
11-ஆக-201721:02:22 IST Report Abuse
Arachi . அதிமுக என்ற ஒரு கட்சி ஜெயலலிதாவிற்கு பின் இருக்காது என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். இப்பொது இக்கட்சிக்குள் எத்தனை உள்கட்சிகள் இருக்கின்றன அவற்றின் பெயர்கள் என்ன , தலை சுற்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
11-ஆக-201720:11:26 IST Report Abuse
GOPALASAMY துணிச்சலான முடிவு என்றால் மன்னார்குடி ஒட்டு மொத்த குடும்பமும் வெளி நாட்டிற்கு ஓடி விடுவதுதான் . ஷெரீப் , இடி அமீன் மாதிரி சவூதிக்கு ஓடி விடலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X