பொது செய்தி

இந்தியா

போபர்ஸ் வழக்கு மீண்டும் விசாரணை: சிபிஐ சூசகம்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக எம்.பி., குழுவிடம் சி.பி.ஐ., கூறியுள்ளது.கடந்த 1986ல் ராஜிவ் ஆட்சி காலத்தின் போது, இந்திய ராணுவத்திற்கு தேவையான போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.கடந்த 2004 பிப்ரவரி 4ம் தேதி, போபர்ஸ்
போபர்ஸ் ஊழல்,Bofors Corruption, சி.பி.ஐ., CPI,எம்.பி.,MP, விசாரணை, investigation, புதுடில்லி, New Delhi, போபர்ஸ் பீரங்கி, Bofors artillery,ராஜிவ் ஆட்சி,Rajiv regime, இந்திய ராணுவம், Indian Army, ஊழல் , Corruption, அரசியல்வாதிகள் ,Politicians, ராணுவ அதிகாரிகள், Army officers,லஞ்சம், Bribery, முன்னாள் பிரதமர் ராஜிவ்,former Prime Minister Rajiv, டில்லி ஐகோர்ட், Dilli HC, இந்துஜா சகோதரர்கள்,Hindu Brothers, சிஏஜி அறிக்கை,CAG report,

புதுடில்லி: போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக எம்.பி., குழுவிடம் சி.பி.ஐ., கூறியுள்ளது.
கடந்த 1986ல் ராஜிவ் ஆட்சி காலத்தின் போது, இந்திய ராணுவத்திற்கு தேவையான போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.கடந்த 2004 பிப்ரவரி 4ம் தேதி, போபர்ஸ் வழக்கில் இருந்து, முன்னாள் பிரதமர் ராஜிவை விடுவித்தது டில்லி ஐகோர்ட். அடுத்த ஆண்டிலேயே இந்துஜா சகோதரர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், போபர்ஸ் பீரங்கி குறித்த சிஏஜி அறிக்கையை பாதுகாப்பு குறித்த எம்பி குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு கூறியதாவது: டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ., மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு, தொழில்நுட்ப தோல்விக்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. குற்றச்செயலை எதிரொலிக்கிறது. வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மத்திய அரசிடம் சி.பி.ஐ., அனுமதி கேட்க வேண்டும் என தெரிவித்தது. மேலும், முன்னரே ஏன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை என சி.பி.ஐ., இயக்குநர் கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை என பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

எம்.பி., குழுவிடம் போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரணை நடத்த தயாராக உள்ளதாக சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (15)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
பொன் வண்ணன் - chennai,இந்தியா
12-ஆக-201710:55:08 IST Report Abuse
பொன் வண்ணன் ஏண்டா..முதல்ல பாபர் மசூதியை இடித்த வழக்கை விசாரிச்சு எல்லோரையும் அவனுங்க சாகரத்துக்குள்ள உள்ளே போடுங்கடா...சிபிஐ கைல இருந்தா எல்லோரையும் மிரட்டுவீர்களா...??
Rate this:
Cancel
Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா
12-ஆக-201700:30:24 IST Report Abuse
Vensuslaus Jesudason Why do you want to flog a dead snake?
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஆக-201723:07:25 IST Report Abuse
K.Sugavanam அடப்பாவமே,இவங்களும் மறுபடியும் மூக்குடைந்து போகப் போகிறார்கள்..தேவை இல்லாத மக்கள்வரிப்பண விரயம்..ஏற்கனவே CBI இந்த வழக்கைப் பொறுத்த வரை படு தோல்வி அடைந்துவிட்டது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X