தினகரன் தான் '420'; முதல்வர் பழனிசாமி

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (58)
Advertisement
தினகரன் 420, Dinakaran 420,முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, ஸ்டாலின்,  Stalin,நீட் தேர்வு,NEET Exam, பிரதமர் மோடி, Prime Minister Modi,புதுடில்லி, New Delhi,  தமிழகம், Tamil Nadu,  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, Supreme Court verdict, பேச்சுவார்த்தை, Talks, சபாநாயகர் ,Speaker,

புதுடில்லி: தினகரன் '420' என கூறியது அவருக்கு தான் பொருந்தும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.


டில்லியில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது: பிரதமரை நேரி்ல் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து முழுமையாக படித்த பின்னர் கருத்து கூற முடியும். தினகரன் '420' என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுகின்றேன்.

கடந்த 3 மாத நிகழ்வுகள் பார்த்திருப்பீர்கள் அதனால் 420 அவருக்கு தான் பொருந்தும். அணிகள் இணைப்பு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இணையும் என நம்புகிறோம். தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஸ்டாலின், எங்கள் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் வெற்றி பெற்றோம். சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றோம். இனிமேல் கொண்டு வந்தாலும் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-201703:57:44 IST Report Abuse
Mani . V இவ்வளவு நாளும் தினகரனின் வழிகாட்டுதலில் ஆட்சி செய்வதாக சொன்ன பழனிசாமியை என்ன எண் கொண்டு அழைக்கலாம்? தங்கள் பதவிக்கு ஆபத்து என்ற உடன் யோக்கியர்கள் போல் பேச வேண்டியது (இதைத்தான் பன்னீர் செல்வமும் செய்தார்).
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
12-ஆக-201701:47:16 IST Report Abuse
John Shiva   U.K சீமான் தினகரன் போன்ற தமிழறிவாளர்கள்தான் தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
11-ஆக-201723:35:06 IST Report Abuse
Appan தமிழக சி.எம் அவர் யாராக இருக்கட்டும் அவரை 420 என்று சொல்வது அந்த பதவிக்கு அவமானம்..அப்படி சொல்பவன் எப்படி இனும்வெளியே உலவி கொண்டு இருக்கிறான்..?.அதுவும் தினகரனை பற்றி லண்டலின் அவன் செய்த தில்லு முல்லுகளை எல்லோரும் பேசும் பொது அவன் எப்படி இன்னும் வெளிய இருக்கிறான்..?. ஏழை பங்களான் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இப்போ கொள்ளகைரர்களில் சிக்கி தவிக்கிறது..என்னசெய்ய..?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X