தினகரன் தான் 420; முதல்வர் பழனிசாமி| Dinamalar

தினகரன் தான் '420'; முதல்வர் பழனிசாமி

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (58)
Share
புதுடில்லி: தினகரன் '420' என கூறியது அவருக்கு தான் பொருந்தும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.டில்லியில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது: பிரதமரை நேரி்ல் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து முழுமையாக படித்த பின்னர் கருத்து கூற முடியும். தினகரன் '420' என
தினகரன் 420, Dinakaran 420,முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, ஸ்டாலின்,  Stalin,நீட் தேர்வு,NEET Exam, பிரதமர் மோடி, Prime Minister Modi,புதுடில்லி, New Delhi,  தமிழகம், Tamil Nadu,  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, Supreme Court verdict, பேச்சுவார்த்தை, Talks, சபாநாயகர் ,Speaker,

புதுடில்லி: தினகரன் '420' என கூறியது அவருக்கு தான் பொருந்தும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.


டில்லியில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது: பிரதமரை நேரி்ல் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து முழுமையாக படித்த பின்னர் கருத்து கூற முடியும். தினகரன் '420' என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுகின்றேன்.

கடந்த 3 மாத நிகழ்வுகள் பார்த்திருப்பீர்கள் அதனால் 420 அவருக்கு தான் பொருந்தும். அணிகள் இணைப்பு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இணையும் என நம்புகிறோம். தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஸ்டாலின், எங்கள் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் வெற்றி பெற்றோம். சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றோம். இனிமேல் கொண்டு வந்தாலும் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X