மேட் இன் இந்தியாவின் தரம்: சீன பத்திரிகை சீண்டல்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (83)
Advertisement
குளோபல் டைம்ஸ், Global Times,சீன உற்பத்தி, Chinese Production, மேட் இன் இந்தியா,Made in India, சீன பத்திரிகை, Chinese Magazine, இந்தியா,India, சீனா உள்நாட்டு உற்பத்தி துறை, China Domestic Product Industry, இந்தியா பொருளாதாரம் India Economy,வரி வருவாய் ,Tax Revenue, வேலைவாய்ப்பு , Employment,

பீஜிங் : சீன பொருட்களின் தரம் மற்றும் உற்பத்தி அளவை எட்டுவதற்கு இந்தியாவிற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


சீன பத்திரிக்கை சீண்டல் :

குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், விலை குறைவு என்பதால் இந்தியர்கள் சீன உற்பத்தி பொருட்களை வாங்கவே அதிகம் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்நாட்டு உற்பத்தி துறைகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால், உற்பத்தி விலை குறைவு. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.


ஈடாக முடியாது :

உலக உற்பத்தி சந்தையில் சீனாவின் இடத்தை பிடிக்கவோ அல்லது சீனாவிற்கு மாற்றாக வரவோ இந்தியாவிற்கு இன்னும் வெகு காலமாகும். இந்த இலக்கை ஒரே இரவில் அடைந்து விட முடியாது. உலக உற்பத்தி சந்தையில் சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு ஜாம்பவானாக இந்தியா கனவு கண்டால் அதற்கு ஒரே குறுக்கு வழி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தான்.


சீனாவால் தான் இந்தியாவுக்கு பிழைப்பு :

உள்கட்டமைப்பில் பின்னடைவு, முதலீட்டிற்கு ஏற்க சூழல் இல்லாதது, அதிகரிக்கும் விலைவாசி, விற்பனை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவால் இது சாத்தியப்படாது. இந்திய தயாரிப்புக்களால் சீன தயாரிப்புக்களுக்கு ஈடு செய்ய முடியாது. சீன பொருட்களை வைத்து தான் இந்திய உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்ற நிலை உள்ளது. சீன கம்பெனிகளின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை தான் இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். சீன கம்பெனிகள் இந்தியாவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதால் தான் இந்தியா பொருளாதாரம் அதிகரித்து, அதனால் வரி வருவாய் பெருகுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (83)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
12-ஆக-201707:14:40 IST Report Abuse
அம்பி ஐயர் நான் சீனப் பொருட்களை வாங்குவதில்லை என்று மார் தட்டிக் கொண்டாலு ம் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் வாட்ச் பேட்டரி முதல் பல்வேறு பொருட்களும் அதன் ஸ்பேர் பார்ட்ஸ்களும் சீனத் தயாரிப்புகளே.... பெரும்பாலான ஹார்ட் டிஸ்க்குகள் பெரும் நிறுவனத் தயாரிப்புகள் எல்லாமே சீனத் தயாரிப்புகள்தான்.... சீனத் தயாரிப்புகள் அனைத்துமே குப்பை என்று ஒதுக்கிவிட முடியாது.... இந்தக் கூற்றில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
12-ஆக-201702:20:51 IST Report Abuse
Makkal Enn pakam சீனர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது.....அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, இந்தியாவில் உற்பத்தி விலை அதிகம்...
Rate this:
Share this comment
Cancel
truth tofday - india,இந்தியா
12-ஆக-201701:02:08 IST Report Abuse
truth tofday உண்மையில் சீனா 20 இல்லை நம்மை விட 200 வருஷங்கள் முன்னிலையில் உள்ளார்கள் நம் வெறும் சுவிட்ச் பாரதம் என பேசுகிறோம் அனல் சீனாவில் எல்லா ஊர்களிலும் இலவச AC வசதி உடன் பொது கழிப்பறிகள் இப்போதோ கட்டிவிட்டார்கள் பெய்கினில் ஓரோருத்தெரு முனைகளிலும் பொது இலவச காலிபிடகஙள் உண்டு எல்லா தலைநகர் கும் bullet train வசதி உண்டு மெட்ரோ வசதி பஸ் வசதி உண்டு அதை செய்ய நமக்கு 200 வருடங்கள் ஆகும் நாம் நட்டு மக்களை பேசி ஏமாற்றுவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X