ஆப்சென்ட் எம்.பி.,க்கள்; பிரதமர் மோடி எச்சரிக்கை| Dinamalar

ஆப்சென்ட் எம்.பி.,க்கள்; பிரதமர் மோடி எச்சரிக்கை

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (24)
Share
பிரதமர் மோடி, Prime Minister Modi, பா.ஜ., BJP, அமித்ஷா,Amit Shah,  ஆப்சென்ட் எம்.பி.,Absent MP,புதுடில்லி, New Delhi, பார்லிமென்ட் ,Parliamentary, சங்கல்ப் யாத்ரா, Sankalp Yatra, திரிரங்க யாத்ரா, Triganga Yatra, சுதந்திர போராட்டம்,  Freedom Struggle,இந்தியா, India,

புதுடில்லி: பார்லிமென்ட் தொடரில் சரியாக பங்கேற்காத எம்.பி.,க்களை 2019ம் வருடம் கவனித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்
டில்லியில் நேற்று பா.ஜ., பார்லிமென்ட் கூட்டம் நடந்தது.


2019ல்:

இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஜன சங்கம் நாட்களில் இருந்த கடின உழைப்பை அமித் ஷா மீண்டும் கொண்டு வந்துள்ளார். கட்சியை விட எந்த தனி நபரும் உயர்ந்தவர் இல்லை. பார்லிமென்ட் தொடரில் கலந்து கொள்வது முக்கியம் என்பதை எம்.பி.,க்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எம்.பி.,க்கள் வருகைக்காக கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. கட்சி தான் அனைத்தும். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை செய்து கொள்ளுங்கள். நான் 2019ல் அனைத்தையும் கவனித்து கொள்கிறேன்.


கடினம்:

அமித்ஷாவும் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல் பார்லிமன்ட் தொடர்களில் கலந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக அரசியல் கட்சியை நடத்துவது எளிது. ஆனால், ஆட்சியில் இருக்கும் போது அது கடினமாகும்.
திரிரங்க யாத்ரா மற்றும் சங்கல்ப் யாத்ராவை எம்.பி.,க்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த 1942 முதல் 1947 வரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திர போராட்டம் போல், 2022ல் இந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல கடின முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X