கார்பரேட் கடன் தள்ளுபடி: ஜெட்லி மறுப்பு

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (45)
Advertisement
கார்பரேட் கடன், நிதியமைச்சர், அருண் ஜெட்லி, காங்கிரஸ், தள்ளுபடி

புதுடில்லி: கார்பரேட் நிறுவனங்களின் ஒரு ரூபாய் கடன் கூடதள்ளுபடி செய்யவில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் சிங் ஹூடா, மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு நிதியமைச்சர் ஜெட்லி எழுத்து பூர்வமாக அளித்த பதில்; கார்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. இது பற்றி எதிர்க்கட்சிகள் அரசு மீது குற்றம்சாட்டுவதற்கு முன்னர், உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். கடனை தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளின் வணிக நோக்கிலான முடிவு. கடந்த 2014 முதல் தற்போது வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை.
கடந்த மார்ச் 31ன் படி, விவசாயம் மற்றும் அதனை சார்ந்த வரா கடன்களின் மொத்த மதிப்பு, ரூ. 62,307 கோடியாக இருந்தது. இது 2016 மார்ச்ல் இது ரூ. 52,964 கோடியாக இருந்தது. வேளாண்மை மற்றும் கிராம புறங்களில் மத்திய அரசு இந்த நிதியாண்டில் ரூ.2.92 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இவ்வாறு ஜெட்லி அதில் கூறியுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி குறித்த திட்டம் ஏதும் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஆக-201708:01:34 IST Report Abuse
தேச நேசன் இயற்கை பேரிடர்களால் அல்லது அந்நிய அரசியல் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடியும் ஒத்திவைப்பும் சகஜம் அது வங்கித்தொழிலில் ஒரு பகுதி இதற்காக வங்கிகளுக்கு நடவடிக்கையெடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு கடன் ஒத்திவைப்புக்கு மாநில அரசுகளும் நெருக்கடி கொடுக்கின்றன (சென்னை வார்தா புயல் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல நிறுவனங்கள் இன்றும் நிமிரவில்லை ) அவை வராக்கடன்களாக ஆகிவிட்டன ஆனால் தள்ளுப்படி செய்யப்படவில்லை என்றாவது அந்த அதிபர் அதனைகட்டியே ஆகவேண்டும் .கட்டாவிடில் அவர் வேறெங்குமே கடன் வாங்க முடியாது இதனை எப்படி தள்ளுபடியாகக் கருதலாம்?
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
12-ஆக-201706:58:48 IST Report Abuse
K.   Shanmugasundararaj கார்பரேட்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து ஒரு பைசா கூட தள்ளுபடி செய்யவில்லை என்பது இந்த கார்ப்பரேட் வக்கீல் , நிதி மந்திரி அருண் ஜெட்லி யின் வாதம்.இவருக்கு உடனடியாக ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் சொல்லி டபுள் டாக்டரேட் பட்டம் கொடுக்கணும்.வங்கியில் இருந்து தரப்படும் வராக்கடன் யார் வீட்டு பணம்.?.எத்தனை லட்சம் கோடி இந்த கார்ப்பரேட் மல்லையாவுக்கு காங்கிரஸ் கடன் தரும்.பி ஜெ பி -மோடி-ஆர் எஸ் எஸ் ராஜ்யசபா எம் பி பதவி தரும்.அம்பானிக்கு வழங்கப்பட்டுள்ள வராக்கடன் 1 .25 லட்சம் கோடி அடானிக்கு 96031 கோடி.இரண்டுபேருக்கு இரண்டு லட்சத்து இருபத்து ஒரு ஆயிரம் கோடி.உனக்கு, மோடிக்கு , மோகன் பகவத்துக்கு,அமித் ஷா வுக்கு சோறு போடும் விவசாயிக்கு இந்தியா முழுவதும் உள்ள கடன் 67 / 68 ஆயிரம் கோடி தான்
Rate this:
Share this comment
Cancel
ananda - thirunelveli,இந்தியா
11-ஆக-201723:43:43 IST Report Abuse
ananda வங்கிகளின் வார கடன் அறிக்கையை, மற்றும் தள்ளுபடி செய்துள்ள அறிக்கைகளை , தொழில் என்ற பெயரில் வழங்கப்படட சலுகைகளை அலசி ஆராய்ந்து பார்த்து நியாயம் என்ன என்பதை சொல்ல வேண்டும். இத்தனை நாட்களாக பேசாமல் இருந்து விட்டு இப்போது அதை மறுக்கும் நிதி அமைச்சர் நடவடிக்கை புதிராகத்தான் இருக்கிறது. என்னதான் நியாயம் என்று தெரிய வில்லை. அவசியம் இல்லாத ஒரு நபருக்கு சலுகைகள் வழங்கப் படடால் அதின் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியவரும். மிகவும் வரிந்து கட்டி அம்பானியை நியாயப்படுத்துகிறார் நிதி அமைச்சர் இதில் என்ன தந்திரம் இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எதையும் யாரையும் நம்புவதற்கு இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X