இதே நாளில் அன்று

Added : ஆக 11, 2017
Advertisement
  இதே நாளில் அன்று

1948 ஆகஸ்ட் 12

கே.சித்தராமையா, கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், வருணா ஒன்றியம், சித்தராமனஹுண்டி என்ற கிராமத்தில், சித்தராமே கவுடா - போரமா தம்பதிக்கு மகனாக, ௧௯௪௮ ஆக.,௧௨ல் பிறந்தார். பி.எஸ்சி., பட்டப்படிப்பை முடித்த அவர், மைசூர் பல்கலையில் சட்டப்படிப்பு படித்தார்.கடந்த, 1978ல் அரசியலில் நுழைந்த அவர், ஜனதா, ஜனதா தளம் கட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வகித்தார். 1999 -- 2004 வரை, கர்நாடக ஜனதா தளம் கட்சி தலைவராக இருந்தார். கர்நாடக சட்டசபைக்கு, ஐந்து முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை, கர்நாடக மாநில துணை முதல்வராக இருந்தார்.
தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இருந்த அவர், ௨௦௦௫ல் விலகினார். பின், காங்கிரசில் இணைந்தார். 2013ல் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர் பிறந்த தினம், இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X