பதிவு செய்த நாள் :
தயார்!
எந்த சூழலையும் சந்திக்க ராணுவ வீரர்கள்...
பார்லிமென்டில் அமைச்சர் ஜெட்லி உறுதி

புதுடில்லி:சிக்கிம் மாநில எல்லையில் வாலாட்டி வரும் சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''எந்த நெருக்கடியான சூழ்நிலையையும் சந்திக்க, நம் படைகள் தயாராக உள்ளன,'' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் தெரிவித்தார்.

 ராணுவ வீரர்கள் தயார், Ready for soldiers,புதுடில்லி ,New Delhi, சிக்கிம் எல்லை, Sikkim border,சீன ராணுவம், Chinese Army, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி, Defense Minister Arun Jaitley,லோக்சபா, Lok Sabha, இந்தியா - சீனா எல்லை, India - China border, டோகோலாம்,Togolam, சி.ஏ.ஜி.,CAG,விவசாயகடன்கள்,Agricultural loans,சைனிக் பள்ளிகள்,Chinese schools, போலி, Fake, ஆயுதங்கள் ,weapons,  ராணுவ ஆயுதத் தயாரிப்பு ஆலை,  Military weapon manufacturing plant,

இந்தியா - சீனா எல்லையில், டோகோலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில் சீன ராணுவம் முயன்றது; அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து, டோகோலாம் பகுதியில், இரு நாட்டுப் படைகளும் குவிக்கப் பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அவநம்பிக்கை வேண்டாம்


லோக்சபாவில், இது தொடர்பான பிரச்னை மற்றும் ராணுவம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதா வது: எந்தவிதமான நெருக்கடியான சூழ்நிலை யையும் சந்திக்க, நம் படைகள் தயாராக உள்ளன. நம் படைகள் மீது எந்த அவநம்பிக்கை யும் வேண்டாம்.

'போர் ஏற்பட்டால், 40 நாட்களுக்கு தேவையான ஆயுதங்கள் ராணுவத்திடம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, 22 நாட்களுக்கு தேவை யான ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாக' சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை

அறிக்கையில் கூறப்பட்டுஇருந்தது. ஆனால், சி.ஏ.ஜி., ஆய்வு நடத்திய பின், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

தேவையான ஆயுதங்கள் தயாராக உள்ளன. நம் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் கையிருப்பு உள்ளன. ராணுவ ஆயுதத் தயாரிப்பு ஆலைகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை; அவை தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியருக்கு அனுமதி


''ராணுவப் பள்ளிகளில் மாணவியரையும் சேர்ப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது,'' என, ராணுவ அமைச்சர், அருண் ஜெட்லி, லோக்சபாவில் தெரிவித்தார்.இது தொடர்பான கேள்விக்கு, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:

நாட்டில் தற்போது, 22 மாநிலங்களில், 26 சைனிக் பள்ளிகள் எனப்படும் ராணுவப் பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. மேலும், 21 பள்ளிகளை துவக் கும் திட்டமும் நிலுவையில் உள்ளது. இந்தப் பள்ளி களில், மாணவியரையும் சேர்த்துகொள்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தொழில் கடன்கள் ரத்தாகாது


லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் சிங் ஹூடா பேசுகையில், ''தொழில் நிறுவனங்களுக்கான கடன் களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், விவசாயகடன்களை ரத்து செய்ய மறுக்கிறது,'' என்றார். இதை மறுத்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

சரியான தகவல்களைப் பெறாமல், இது போன்று புகார் கூறுவது தவறு. தொழில் கடனில், ஒரு ரூபாயைக் கூட, மத்திய அரசு தள்ளுபடி செய்ய வில்லை. கடன்களை, வாராக் கடன்களாக நிர்ண யிப்பது வங்கிகள் தான்; இதில் மத்திய அரசு

Advertisement

தலையிடுவதில்லை. கடந்த, 2014 முதல், விவசாயக் கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. சில மாநிலங்கள் தள்ளுபடி செய்வதாக அறிவித் துள்ளன. இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, நாடு முழுவதும், 62 ஆயிரத்து, 307 கோடி ரூபாய் அளவுக்கு வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு அளிக்கப்பட்ட கடன், வாராக் கடனாக மாறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை


போலி பெயரில் துவக்கப்படும் நிறுவனங்கள் தொடர்பான கேள்விக்கு, நிதி, ராணுவம் ஆகிய துறைகளுடன், நிறுவனங்கள் விவகாரத்தை யும் கவனித்து வரும் அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

தொழில் செய்வதற்கான உகந்த வாய்ப்புகளை நாம் அளித்து வருகிறோம். அதே நேரத்தில் அதை தவறாகப் பயன்படுத்தி, போலி பெயரில் நிறுவனங்கள் துவக்குகின்றனர். இது போன்ற நிறுவனங்கள் பதிவு செய்வதை தடுக்கவும், அவ்வாறு உள்ள நிறுவனங்களை மூடுவதற் கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; இது மேலும் தீவிரமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
12-ஆக-201710:59:37 IST Report Abuse

மஸ்தான் கனிபோர் ஏற்பட்டால் 40 நாளுக்கு தேவையான ஆயுதங்கள் இருக்க வேண்டும் ஆனால் 22 நாளுக்கு தேவையான சரக்கு இருக்குது .., எதிலதான் நிறைவு பெற்றிருக்கு.., திட்டங்கள் அறிவித்தாலும் எதுவும் நிறைவு பெறுவதில்லை அதனால் கோடிகள் வீண் செலவாகுது ஆனால் ராணுவத்திற்கு தேவையான இருப்பு இல்லை என்ற போது ராணவு வீரர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கும் ஏற்கனவே 3 ஆண்டில் 320 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் அதற்க்கு காரணம் அரசின் மெத்தன போக்கு தான்.., ஏன் அமைச்சரே அவநம்பிக்கை வராதா?

Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
12-ஆக-201710:44:35 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ கடன்களை, வாராக் கடன்களாக நிர்ண யிப்பது வங்கிகள் தான் இதில் மத்திய அரசு தலையிடுவதில்லை. //// சேமிப்பிற்கான வட்டியைக் குறைத்தால் அதை ஆதரித்துப் பேசுவது ஏன் ????

Rate this:
B.Indira - thane,இந்தியா
12-ஆக-201710:29:21 IST Report Abuse

B.Indiraஎஸ் பி ஐ முன் நாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா நாங்கள் கணக்கு முடிப்பதற்காக செய்வது தள்ளுபடியல்ல.கடன் கடன் தான். என்கிறார்

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X