பதிவு செய்த நாள் :
ராமஜென்ம பூமி - மசூதி வழக்கில்
டிச., 5 முதல் இறுதி விசாரணை

புதுடில்லி:'அயோத்தி ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குகளில், இறுதி விசாரணை, டிச., 5ல் துவங்கும்' என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ராமஜென்ம பூமி,Ramamenjam Bhoomi, மசூதி வழக்கு,Masjid case, இறுதி விசாரணை, final trial,புதுடில்லி, New Delhi,அயோத்தி ராம ஜென்ம பூமி,Ayodhya Ram Janmabhoomi, பாபர் மசூதி, Babri Masjid, வழக்கு,Case, உச்ச நீதிமன்றம் , Supreme Court,உத்தர பிரதேசம், Uttar Pradesh, முதல்வர் யோகி ஆதித்ய நாத் ,Chief Minister Yogi Aditya Nath, பா.ஜ அரசு,BJP Government, சர்ச்சை,controversial, சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம், Sunni Muslim Wakf Board, நிர் மோகி அகாரா அமைப்பு ,Nir Mohi Agara Organization, ராம் லாலா அமைப்பு , Ram Lala Organization, நீதிபதிகள்,judges, தீபக் மிஸ்ரா, Deepak Mishra,அசோக் பூஷண்,Ashok Bhushan, அப்துல் நசீர் , Abdul Nasir,

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந் துள்ளது. இங்குள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992, டிச., 6ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத்

உயர்நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. சர்ச்சைக் குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம், நிர் மோகி அகாரா அமைப்பு மற்றும் ராம் லாலா அமைப்பு ஆகியவைபிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகி றது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்த போது, இறுதிக்கட்ட விசாரணையை துவக்கு வது குறித்து நீண்ட விவாதம் நடந்தது. அனைத்து தரப்புவாதங்களையும் கேட்ட, அமர்வு அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, டிச., 5ல் துவங்கும். எந்த காரணத்துக்காகவும், விசாரணையை ஒத்திவைக்க யாரும் கோரக் கூடாது. இந்த வழக்கு தொடர்பான

Advertisement

ஆவணங்கள், எட்டுமொழிகளில் உள்ளன. அவற்றை, 12 வாரங் களுக்குள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும். அரசு தரப்பு ஆவணங்களை, உ.பி., அரசு, 10 வாரங்களுக் குள் ஆங்கிலத்தில் மொழிபெயர் த்து தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (5)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஆக-201715:45:09 IST Report Abuse

Endrum Indianடிச., 5ல் துவங்கும்' என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது? நிச்சயமாக 2017 தானே அப்புறம் சொல்லக்கூடாது நாங்கள் தான் எந்த வருடம் என்று சொல்லவில்லையே என்று???

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஆக-201708:59:20 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇந்த வழக்கில் நீதிமன்றம் முடிவு சொல்லும் முன்பே அவர்கள் இருவரும் ஒன்றாகி விடுவார்கள்... மஸூதியும் ,ராமர்சன்னதியும் ஒரே இடத்தில் கட்டவும் வாய்ப்பு உண்டு... ராமர்தான் இறைதூதர்... இறைதூதர் தான் நபிகள்... நபிகள் தான் ராமர்... யாரும் அநியாயத்தை போதிக்கவில்லை...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-201707:39:33 IST Report Abuse

Kasimani Baskaranநீதிமன்றம் செயல்படுகிறதே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டும்...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X