பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
7.5 சதவீத வளர்ச்சி சாத்தியமில்லை
பொருளாதார ஆய்வறிக்கை தகவல்

புதுடில்லி:'ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2016 - 17ம் நிதியாண் டில், 7.5 சதவீதத்தை எட்டுவதற்கு சாத்திய மில்லை' என, பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

 7.5 சதவீத வளர்ச்சி, 7.5 percent growth, சாத்தியமில்லை, not possible, பொருளாதார ஆய்வறிக்கை தகவல், economic analysis information, புதுடில்லி ,New Delhi,ஜி.டி.பி.,GDP, மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி, GDP growth,gross domestic product,பட்ஜெட்,budgeting,  செல்லாத ரூபாய் நோட்டு, invalid banknote, பார்லிமென்ட், Parliament, ஜி.எஸ்.டி,GST

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். முந்தைய நிதியாண்டின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்படும்.அதன்படி, 2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, இந்தாண்டு, ஜனவரியில் தாக்கல் செய்த போது, 2016 - 17ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை
தாக்கல் செய்யப்பட்டது.

பார்லி.,யில் தாக்கல்


அதில், 6.75 முதல், 7.5 சதவீதம் வரையில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இருக்குமென, கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், முதல் முறையாக, பொருளாதார ஆய்வறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டு, 2-வது பொருளாதார ஆய்வறிக்கை, பார்லி.,யில் நேற்று தாக்கல்

செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள் ளதாவது: முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், 6.75 முதல், 7.5 சதவீதம் வரை, வளர்ச்சி விகிதம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஏற்றுமதி கள் அதிகரிக்கும், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, நுகர்வு அதிகரிக்கும் உள்ளிட்ட காரணிகள் அடிப் படையில் இது கணக்கிடப்பட்டது.

வாராக்கடன்கள்


ஆனால், ஜி.டி.பி.,உள்ளிட்ட பல்வேறு பொருளாதார காரணிகள், முதல் காலாண்டில் இருந்தே, வேகம் குறைந்தன. மூன்றாவது காலாண் டில் இது மேலும் சரிந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, விவசாயி களுக்கான கடன் ரத்து, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு மாறுவதில் ஏற்பட்ட சவால்கள் போன்ற வற்றால், எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கவில்லை. வாராக்கடன்கள் பிரச் னையாலும், வளர்ச்சி அதிகரிக்கவில்லை.

இது போன்ற காரணங்களால், நாட்டின் பொருளா தார வளர்ச்சி விகிதம், 6.75 முதல், 7.5 சதவீதம் வரை இருக்கும் என்பதில் உயர்நிலையை அடைவதற்கு சாத்தியமில்லை. அதே நேரத்தில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள்,பணத் தட்டுப் பாட்டை குறைப்பது, வாராக் கடன் பிரச்னையில் சீர்திருத்தம் போன்றவற்றின் மூலம், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.இதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஈடுபட வேண்டும்.

ஜி.எஸ்.டி., அறிமுகத்தால், சரக்கு நடமாட்டத்தில் இருந்த தடைகள் தவிர்க்கப்படுவதும்,சாதகமாகவே இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த, 2016 - 17ம் நிதிஆண்டுக்கான பொருளா தார வளர்ச் சியை கணக்கிடும் பணி, தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்
பார்லிமென்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப் பட்டு உள்ள முக்கிய அம்சங்கள்:
* ஜி.டி.பி.,யில் எதிர்பார்த்தபடி, 6.75 முதல், 7.5 சதவீத வளர்ச்சியில் உயர்நிலையை எட்டுவதற்கு சாத்தியமில்லை * நிதிப் பற்றாக் குறை, 2016 - 17ம் நிதியாண்டில், 3.5 சதவீதமாக இருந்தது; இது, 2017 - 18ல், ஜி.டி.பி.,யில், 3.2 சதவீதமாக குறையும்
* பணத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், கடன் வட்டி விகிதங்கள் குறைய வேண்டும்
* ஜி.எஸ்.டி.,யால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயரும்
* செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, 5.4 லட்சம் புதிய வரி செலுத்து வோர் இணைந்துள்ளதால், ஜி.டி.பி., வளர்ச்சி சிறிதளவு உயர்ந்துள்ளது
* செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் பலன், விரைவில் கிடைக்கும்
* விவசாயி களுக்கான, ரூ.2.7 லட்சம் கோடி கடன்களை, பல மாநிலங்கள் ரத்து செய்தன. இதனால், ஜி.டி.பி., வளர்ச்சி, 0.7 சதவீதம் குறைந்தது
* விவசாய பொருட்களுக்கான சேமிப்பு உச்ச வரம்பு, அவற்றின் நடமாட்டத்துக்கு உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்
* ஏழைகளுக்கு மின் வசதி கிடைப்பதில், உடனடி நடவடிக்கை தேவை
* நாட்டின் அவசரகால ரொக்க இருப்பில், மிகப் பெரிய பொருளாதார நாடுகளில், பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளோம்
* வேலைவாய்ப்பின்மை, மிகப்பெரிய பிரச்னை யாக அமைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raaja Sn - chennai,இந்தியா
11-அக்-201706:30:37 IST Report Abuse

Raaja Snநீங்கதான் , அதானி , அம்பானி , தவிர யாரையும் பிசினஸ் செய்ய விடலையே , அப்புறம் எப்படி மத்தவன் கடன் காட்டுவான், வாரா கடன் குத்தமா பக்க கூடாது , அவன் இயலாமை. அவனுக்கு தொடர்ந்து நடத்த சப்போர்ட் பண்ணனும், இல்லனா அவன் சொத்தை புடிங்குட்டு வந்துட்ட அவனும் அழிஞ்சான், அவன் தொழிலும் அழிஞ்சது, இன்று பொருளாதாரத்தைவிட மனிதாபிமானம் தேவை, அது மோடி ஆட்சியில் செத்து போச்சி, ஆட்சி குறை சொன்னால், கோவம் வருது, இல்லனா , அவன் செயலையே, இவன் செயலையே னு பேசறாங்க, அவங்க கிட்ட பதில் இல்ல, மோடிக்கு ஜால்ரா போடறவங்க அவருக்கு தேவ இல்ல, விமர்சிக்கிறவங்க தான் தேவை, அப்போதான் ஆரோக்கியமான இந்தியா உருவாகும் ,

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஆக-201715:26:07 IST Report Abuse

Endrum Indian6 .50 % - 6 .75 % வந்தால் கூட போதும் (7 .50 % வராமல்) அதற்கும் கீழே போனால் அவ்வளுவு நல்லதில்லை.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
12-ஆக-201710:59:48 IST Report Abuse

g.s,rajanWill it be Zero Percent ??? g.s.rajan, Chennai

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X