அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல்

சென்னை:''தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

 நம்பிக்கையில்லா தீர்மானம், No confidence,ஸ்டாலின், Stalin, மிரட்டல்,Intimidation,சென்னை,Chennai, தமிழக அரசு,Tamil Nadu Government,  தி.மு.க.  செயல் தலைவர் ஸ்டாலின் ,DMK executive leader stalin, முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy,தமிழக மக்கள், Tamilnadu People, சட்டசபை, Assembly, பட்டு வேட்டி பரிசு, Silk Vatti Gift,silk dhothi Gift,  முரசொலி பவள விழா, Murasoli Pawala Festival,Murasoli Coral festival, அ.தி.மு.க., AIADMK,

தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும்,ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்த திலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய அசாதாரண சூழலில், தேவைப்பட் டால், அரசுக்கு எதிராக, சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரு வோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பட்டு வேட்டி பரிசு:முரசொலி பவள விழாவை முன்னிட்டு, தி.மு.க.,வின், 65 மாவட்டச் செயலர் களுக்கு, பட்டு வேட்டி, கடிகாரம் பரிசு வழங்கி, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கவுர வித்தார். முரசொலி பவள விழாவை ஒட்டி, சென் னை யில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன. அதில், பங் கேற்பதற்காக, 65 மாவட்டசெயலர் களும், சென்னையில் முகாமிட்டி ருந்தனர். அவர் கள் எல்லாரும், நேற்று காலை, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு அழைக்கப் பட்டனர்.

அ.தி.மு.க., ஆட்சியின் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்கப்படும் என, மாவட்டச் செயலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அரசியல் தொடர்பாக, எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. முரசொலி பவள விழா காட்சி அரங்கம் திறப்பு, பத்திரிகை ஆசிரியர் கள் வாழ்த்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை, சிறப்பாக நடத்தி கொடுத்த மாவட்டச் செயலர் களுக்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 65 மாவட்டச் செயலர்களுக்கும், பட்டு வேட்டி, கடிகாரங்களை

Advertisement

பரிசாக, ஸ்டாலின்வழங்கினார்.

'ஆட்சி மாற்றம் நிச்சயம்!':''தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை, ஸ்டாலின் நினைத்தால் கொண்டு வர முடியும்,'' என, தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை, அறிவால யத்தில் நடந்த, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், துரை முருகன் பேசியதாவது:முரசொலி பவள விழா வில், பத்திரிகை ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினர். தேர்தல் நேரத்தில், தி.மு.க.,வை தாக்கி எழுதிய பத்திரிகைகள் எல்லாம், கருணாநிதி, ஸ்டாலினை பாராட்டி பேசியதை படிக்கும் போது, எனக்கு பெருமையாக இருக்கிறது. இது, ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி.

இனிமேல், ஸ்டாலினுக்கு கிடைக்கும் வெற்றி அனைத்தும் எளிதாக அமைந்து விடும்;அவரை யாராலும் வீழ்த்த முடியாது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி, 16 அடி தான் பாயும் என்பர். ஆனால், ஸ்டாலினோ, 64 அடி பாய்ந்து விட்டார்.

எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற் றத்தை, ஸ்டாலின் நினைத்தால் கொண்டு வர முடியும்; அவரால் முடியாதது ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
12-ஆக-201722:49:23 IST Report Abuse

adalarasanநிச்சயமாக கொண்டு வாருங்கள் அப்பொழுதுதான் உங்களின் சூழ்ச்சியை தோற்கடிக்க, மூன்று, ஆளும் கட்சி பிரிவுகளும் வொன்று சேருவார்கள்

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
12-ஆக-201721:34:52 IST Report Abuse

ezhumalaiyaanஎப்பொழுதுதான் இந்த ஜால்ரா சத்தத்தை நிறுத்துவார்கள்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
12-ஆக-201716:30:42 IST Report Abuse

Balajiஉண்மையில் இவரது திறமையின்மையை திமுகவினரே பலர் இவரை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்........ அதை மறக்கடிப்பதற்காக தம்பிதுரையை வைத்து எதையோ பினாத்த வைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை....... அதிமுக பல அணிகளாக சிதறிக்கிடக்கும் இந்த சூழலையும் பயன்படுத்த தெரியாமல் செயலிழந்து கிடக்கிறது திமுக என்பது தான் இன்றைய நிதர்சனம்.............

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X