அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க...!
'கெடு' விதிக்கிறார் தினகரன்

தஞ்சாவூர்:''ஒரு வாரம் பொறுத்திருங்கள், பல்வேறு முடிவுகள் தெரியவரும்,'' என, சசிகலாவின் உறவினர் தினகரன் கூறினார்.

 ஒரு வாரம்,one week, தினகரன், Dinakaran,தஞ்சாவூர், Thanjavur, சசிகலா, Sasikala, அ.தி.மு.க.,ADMK, நண்பர்கள்,Friends, பயம்,Fear, சுயநலம் ,Selfishness,  தேர்தல் கமிஷன், Election Commission, துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா, Vice President inauguration ceremony, ஓ.பி.எஸ்.,OPS, ஈ.பி.எஸ்., EPS, முதல்வர், Chief Minister, மேலுார் பொதுக்கூட்டம், Melur General Meeting , சந்தனாலட்சுமி, Chandanalakshmi,தஞ்சாவூர் - ரங்கசாமி,Thanjavur - Rangaswamy, அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி,Aravakurichi - Senthil Balaji, ஆண்டிபட்டி - தங்க. தமிழ்செல்வன், Andipatti - Thanga Thamizhuvarai, விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி, Vattathikulam - Umamaeshwari,சாத்தனுார் - சுப்பிரமணியன், Chattanur - Subramanian, ஓட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன், Ottapidaram - Sundararjan, மானாமதுரை - மாரியப்பன் கென்னடி,Manamadurai - Mariyappan Kennedy, நிலக்கோட்டை - தங்கதுரை,Nilkottai - Thanadurai, தர்மபுரி - பழனியப்பன், Dharmapuri - Palaniappan, கம்பம் - ஜக்கையன், Kumbham - Jagayan, பெரியகுளம் - கதிர்காமு, Periyakulam - Kathirkamu,பரமக்குடி - முத்தையா,Paramakudi - Muthaiah.

தஞ்சையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க.,வில், சில நண்பர்கள், பயம், சுயநலம் காரணமாக, 'சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்' என சொல்கின்றனர். போலீசார் அனுமதி மறுத்தாலும், மேலுாரில் கூட்டம் நடக்கும்.

பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி, தீர்மானம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால்,

கையெழுத்திட்டவர்களின் பதவி பறிபோகும். சசிகலா அறிவித்த பொருளாளர் பதவி செல்லும் போது, துணை பொது செயலர் பதவி ஏன் செல்லாது. துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு பதில், ஓ.பி.எஸ்., - ஈ.பி.எஸ்., பங்கேற்றுள்ளனர்.

அ.தி.மு.க.,வில், 23 வயதில் இருந்து இருக்கிறேன். சட்டதிட்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். அ.தி.மு.க., நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன்.திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து, சசிகலா முடிவு செய்வார். ஆட்சியும், கட்சி யும் இரட்டை தண்டவாளங்கள். தடம் மாறாமல் சென்றால், ஆட்சிக்கு பிரச்னை வராது. ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா என்பதை, முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேட்க வேண்டும்.

பொதுக்குழுவை கூட்டாமல், யாரையும் நீக்கும் அதிகாரம்எனக்கு உள்ளது. ஒரு வாரம் பொறுத்து இருந்து பாருங்கள். மேலுார் பொதுக்கூட்டத்தில், அனைத்து விபரங்களையும் தெரிவிப்பேன். இவ்வாறு தினகரன் கூறினார்.

12 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு:தஞ்சையில் நேற்று

Advertisement

நடந்த தினகரன் மாமியார் சந்தனாலட்சுமி பட திறப்பு விழாவில், தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள், 12 பேர் பங்கேற்றனர்.அவர்கள் விபரம்:

தஞ்சாவூர் - ரங்கசாமி, அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி, ஆண்டிபட்டி - தங்க. தமிழ்செல்வன், விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி, சாத்தனுார் - சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன், மானாமதுரை - மாரியப்பன் கென்னடி, நிலக் கோட்டை - தங்கதுரை, தர்மபுரி - பழனியப்பன், கம்பம் - ஜக்கையன், பெரியகுளம் - கதிர்காமு, பரமக்குடி - முத்தையா.


Advertisement

வாசகர் கருத்து (43)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
12-ஆக-201723:07:49 IST Report Abuse

Tamilachiமுதலில்ம சசி யை பார்த்துவிட்டு வந்து 60 நாட்கள் கெடு கொடுத்தார் ஒன்றும் செய்ய முடியவில்லை, பின்பு AUG 5 தேதிக்கு மேல் என் நடவடிக்கைகளை பாருங்கள் என்று சொன்னார். அதுவும் ஆகவில்லை, இப்போது ஒரு வாரம் கெடு? கெடுங்காலம் கிட்ட வந்து நின்னா இப்படித்தான் கெடு சொல்லிக்கொண்டே போவார்களோ ?.....

Rate this:
kandu -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-201722:11:54 IST Report Abuse

kanduso every thing ll be solved after one week

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
12-ஆக-201719:18:46 IST Report Abuse

Tamilselvanஇவர் ஒரு டுபாக்கூர் இவரை போன்ற கொள்ளையர்கள் பொது வாழ்வில் இருந்து தூக்கி ஏறிய பட வேண்டியவர்கள்

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X