அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி புதிய மனு

முதல்வர் பழனிசாமி அணியின் சார்பில், தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தேர்தல் கமிஷனிடம், புதிய மனுவை, பன்னீர் செல்வம் அணியினர், நேற்று தாக்கல் செய்தனர்.

 தேர்தல் கமிஷன்,Election Commission,பன்னீர் அணி, Panneer,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,பன்னீர் செல்வம்,Panneer Selvam, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, late Chief Minister Jayalalithaa, அ.தி.மு.க.,ADMK,இரட்டை இலை சின்னம் ,Double leaf symbol, சசிகலா ,Sasikala, முன்னாள் முதல்வர் பன்னீர் , Former Chief Minister Panneer, பிரமாண பத்திரங்கள், Statutory bonds, தினகரன்,Dinakaran, ராஜ்யசபா எம்.பி., Rajya Sabha MP, மைத்ரேயன்,Maitreyan, டில்லி,Delhi, ஜெயலலிதா, Jayalalithaa,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறை வுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவை அடுத்து, கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதை மீட்கும் முயற் சியில், சசிகலா தப்பினரும், முன்னாள் முதல் வர் பன்னீர் தரப்பினரும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர். இரு அணிகள் சார்பிலும், தேர்தல் கமிஷனில், பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சசிகலாவால், கட்சியின் துணை

பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கும், முதல்வர் பழனிசாமி அணியினருக்கும் இடையி லான மோதலின் உச்ச மாக, தினகரன், தன் ஆதர வாளர்கள் சிலரை, கட்சி யின் நிர்வாகிகளாக நியமித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள், சென்னையில் உள்ள, அ.தி.மு.க.,தலைமையகத்தில் ஒன்று கூடி, தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றிஉள்ளனர். அதில், 'ஜெயலலிதாவால், கட்சி யிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், கட்சியின் துணை பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது; அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனமும் செல்லாது' என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பன்னீர் அணியைச் சேர்ந்த, ராஜ்ய சபா எம்.பி., மைத்ரேயன், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு நேற்று சென்றார். முதல் வர் பழனிசாமி அணியினரால், தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை, ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து,அதை, தேர்தல் கமிஷனில் ஒப்படைத்தார்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:'முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அதன்பின், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட வில்லை. 'எனவே, சசிகலாவால், கட்சியின் துணை

Advertisement

பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது' என, பழனிசாமிஅணியினர் தீர்மானம் நிறைவேற்றிஉள்ளனர்.

அந்த வகையில், அந்த அணியின் சார்பில், இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களிலும் பொய்யான தகவல்களே இடம் பெற்றுஉள்ளன. எனவே, சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலராக நியமித்ததும் செல்லாது.அந்த அணியின் சார்பில், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரங் களை, தேர்தல் கமிஷன் நிராகரிக்க வேண்டும். எங்கள் தரப்பையே, உண்மையான, அ.தி.மு.க., என, அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஆக-201717:14:31 IST Report Abuse

Malick Rajaஅதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால்தான் தினசரி தலைவலி வராமல் இருக்கும்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஆக-201716:28:17 IST Report Abuse

இந்தியன் kumarரஜினி அவர்கள் வந்து தான் அடிமைகளையும் ரவுடிகளையும் அழிக்க வேண்டும் . சீக்கிரம் தேர்தலை நடத்துங்கப்பா

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஆக-201709:04:29 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇன்னுமா.... உடன்பாடு எட்டவில்லை....? உங்களுக்கு எல்லாம் வயசு ஆகிவிட போகிறது...?

Rate this:
sivan - Palani,இந்தியா
12-ஆக-201712:22:32 IST Report Abuse

sivan நமக்கு வயசாகிறதே என்று கவலைப் படுங்கள். குஜராத் போல தடையில்லா மின்சாரம் அரசாங்க வேலைகளில் அலுவலகத்தில் ஊழல் இன்மை. பிஹார் போல மது விலக்கு, உபி போல நேர்மையான முதல் அமைச்சர் மற்றும் அரசு ஊழியர் கட்டுப்பாட்டுடான் வேலை நேரத்திற்கு வந்து ஒழுங்காக பணி செய்வது... மற்றும் மாணவர்கள் /இளைஞர்கள் பொது இடங்களில் ஒழுக்கத்த்த்துடன் நடந்து கொள்வது ( JNU கன்னையா போல பொது இடத்தில் , பல்கலை கழகத்தில் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்வது என்றில்லாமல்) .. மக்கள் ஒழுங்காக வரி கட்டுவது , வீட்டில் கார், பைக் வைத்துக் கொண்டே ஏழைகளுக்கு வழங்கும் ரேஷன் சர்க்கரை அரசிக்கு பங்கு போடுவதை தடை செய்வது போன்ற பல விஷயங்கள் நமக்கும் நடக்க வேண்டாமா? பி.ஜெ.பி தலையிடுவது தமிழக அரசியலில் அல்ல தமிழக அரசு நிர்வாகத்தில் ... .. நமக்கும் நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டாமா? ...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஆக-201713:33:33 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"பி.ஜெ.பி தலையிடுவது தமிழக அரசியலில் அல்ல தமிழக அரசு நிர்வாகத்தில் ... .. நமக்கும் நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டாமா?" அப்போ அதுக்கு தேர்தலை வச்சி, மக்களிடம் ஓட்டு வாங்கி , ஜெயிச்சி, ஆட்சிக்கு வாங்கடா நொன்னைங்களா.. பேச வந்துட்டான் வியாக்கியானமா. ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X