அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பூச்சாண்டி,boogeyman, தினகரன் 420, Dinakaran 420, அ.தி.மு.க அரசு,ADMK government, ஸ்டாலின்,Stalin, நம்பிக்கை யில்லா தீர்மானம் ,No confidence ,டில்லி, Delhi,முதல்வர் பழனிசாமி,Chief minister Palanisamy, நீட் தேர்வு , NEET Exam, தமிழகம், Tamilnadu, சென்னை, Chennai, தேர்தல் கமிஷன், Election Commission, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy speaker Thambidurai,, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan,

''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

பூச்சாண்டி,boogeyman, தினகரன் 420, Dinakaran 420, அ.தி.மு.க அரசு,ADMK government, ஸ்டாலின்,Stalin, நம்பிக்கை யில்லா தீர்மானம் ,No confidence ,டில்லி, Delhi,முதல்வர் பழனிசாமி,Chief minister Palanisamy, நீட் தேர்வு , NEET Exam, தமிழகம், Tamilnadu, சென்னை, Chennai, தேர்தல் கமிஷன், Election Commission, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy speaker Thambidurai,, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan,

சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச்

செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட விரோத மானது; அவர் வெளியிடும் அறிவிப்பு கள், அ.தி. மு.க., தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத் தாது' என,தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது, தினகரன் அணியி னரிடம், கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக, முதல் வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை, தினகரன் கடுமையாக சாடினார்.

'நீங்க தான்420


அ.தி.மு.க., பெயரை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ள நிலையில், கட்சி யின், 'லெட்டர் பேடில்' தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். இந்த மோசடி குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் செய்தால், பதவி பறி போய் விடும். 'தீர்மானத்தில் கையெழுத்திட் டுள்ள, முதல்வர் உட்பட அனைவரும், 420' என்றும், காட்டமாக விமர்சித்தார்.

மோசடி, ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனை சட்டத் தின், 420வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்வது வழக்கம். அதனால், மோசடி

Advertisement

பேர்வழிகள், '420' என, அழைக்கப்படுகின்றனர். எனவே, தினகரனின் விமர்சனம், அரசியல் வட்டாரத்தில், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற் காக, முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம், டில்லி சென்றார். டில்லியில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனி ருந்தனர். பிரதமரிடம் பேசிய முதல்வர், 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

நம்பிக்கை


பிரதமரை சந்தித்த பின், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:

தினகரன், '420' என, குறிப்பிட்டது, அவருக்கு தான் பொருந்தும். ஏனென்றால், மூன்று மாத நிலையை, நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதற்கு யார் பொருத்தம் என்றால், அவர் தான் பொருத் தமாக இருப்பார். அ.தி.மு.க., அணிகள் இணைப்பு குறித்து, எங்கள் தரப்பிலும் சரி, அவர்கள் தரப்பிலும் சரி, பேச்சு நடைபெற வில்லை; இணையும் என, நம்புகிறோம். ஸ்டாலின், ஏற்கனவே எங்கள் மீது, நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தார்; அதில் வெற்றி பெற்றோம். பின், சபாநாயகர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றோம். இப்போதும் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், நிச்சயமாக அதிக ஓட்டுகளில், நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (72)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
12-ஆக-201723:53:56 IST Report Abuse

POLLACHI JEAYASELVAN  sanjose USAஇந்த 420 களுக்கு ஓட்டு போட்டவர்கள் ....?இன்று வரை இந்த தமிழ்நாட்டு 420 க்களை சந்தித்து மகிழும் டெல்லி 420 க்கள் ....?மொத்தத்தில் எனது காந்தி தேசம் 420 க்களின் தேசமாகி , நாசமாகி போய் விட்டதே .... வெட்கக்கேடு ...

Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
12-ஆக-201718:28:41 IST Report Abuse

SaiBabaஉண்மையான தகுதியுள்ள தியாகம் நிறைந்த தலைவர்களை காண மனம் தவிக்கிறது. இந்த மூஞ்சிகளையெல்லாம் பார்க்கக்கூட பிடிக்கவில்லை.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-ஆக-201711:04:15 IST Report Abuse

Panneerselvam Chinnasamyயார் 420 என்று பட்டிமன்றம் வைத்தால் என்ன ... தினகரன் அணியில் , புகழேந்தி, நாஞ்சில் சம்பத், வெற்றிவேல், எடப்பாடி அணியில் ஜெயக்குமார்,வளர்மதி ,செங்கோட்டை... நடுவராக சபாநாயகர் தனபால்...(இதையாவது கொஞ்சம் பயம் இல்லாமல் செய்வாரா தனபால் ?)

Rate this:
vidhuran - chennai,இந்தியா
12-ஆக-201713:18:38 IST Report Abuse

vidhuranஎன்னது? பட்டி மன்றமா? அதுவும் தனபால் நடுவராகவா? அவரை ஒரு வழி பண்ணிவிடுவது என்ற எண்ணமா சின்னசாமி? இந்த லாவணிக்குள் எங்கு செல்வது என்று அறியாமல் இருக்கும் அவரை போயி எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள்? இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் நம் நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியை போடலாம். அவரும் கொஞ்ச நேரம் கலைஞர் புகழ் பாடிவிட்டு தமாஷாக எதையாவது சொல்லி (சொல்வதாக நினைத்துக் கொண்டு)பொழுது போக்குவார் ...

Rate this:
rajangam ganesan - lalgudi,இந்தியா
12-ஆக-201716:32:25 IST Report Abuse

rajangam ganesanகட்டுமரம் தான் 420 ...

Rate this:
sankar - trichy,இந்தியா
12-ஆக-201717:39:42 IST Report Abuse

sankarபல மாவட்டம் வட்டம் ஒன்றிய செயலாளர்களை 420 ஆக்கியது , தன் குடும்பத்தையே 420 ஆக்கியது . போன்ற பல சாதனைகளை செய்தது கட்டுமரம் . அதே பாணியில் வந்து அவர்களை ஜெயிக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு சுருட்டியது அதிமுக 420 ரஜினி கமல் தான் அடுத்த சாய்ஸ் . சீமான் தனி தமிழ்நாடு யோசிக்கும் தீவிரவாதி அதனால் யாழ்ப்பாணத்துக்கு எட்டப்பட்ட நிலைமை தமிழ் நாட்டுக்கும் எட்டப்படும் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத எல்லோரையும் புறக்கணியுங்கள் ...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஆக-201720:39:04 IST Report Abuse

dandyஇன்னும் 100 ஆண்டுகளில் தமிழா நாடு (என்ஜின் இல்லாத கார் மாதிரி ) குடிக்க தண்ணீரை கூட இறக்குமதி செய்ய நேரிடும் ..500 வருடங்களில் காடு ,,ஆறுகள் எல்லாம் அளித்து பிளாட் (செம்மொழி ) போட்டு விற்றதனால் பாலை வானம் ஆகிவிடும் ..இதைத்தான் இந்த ஜீமான் தொண்டை கிழிய சொல்கிறார் ..அனால் எங்களுக்கு பிலிம் ஸ்டார் தான் தேவை ...இந்திக்காரனுக்கு அடிமையாக இருப்பதில் இன்பம் ...

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X