'நாட்டுக்காக செல்வந்தர்களும் தியாகம் செய்துள்ளனர்'

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: நாட்டின் புதிய, துணை ஜனாதிபதியாக நேற்று பொறுப்பேற்ற, வெங்கையா நாயுடு, ராஜ்யசபா தலைவர் என்ற முறையில், சபை நடவடிக்கைகளை வழிநடத்தினார். அப்போது பேசிய, பிரதமர் மோடி, ''ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தோர் பலரும், இன்று நாட்டின் பல்வேறு உயர் பொறுப்பு வகிப்பதே ஜனநாயகத்தின் பெருமை,'' என்றார்.

மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்., உறுப்பினர் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: சுதந்திர போராட்டத்தில், அனைத்து தரப்பினரின்பங்களிப்பும் உள்ளது. ஏழைகள் மட்டுமின்றி, பெரும் செல்வந்தர்களும், தங்கள் சொத்துகளை தியாகம் செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் நேரு, மிகப்பெரிய வழக்கறிஞர்; கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு அதிபதி. மக்களுக்காகவும், நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காகவும், தன் சொத்துகளை தியாகம் செய்தார்.மஹாத்மா காந்தியும், மிகப்பெரிய, திறமையான வழக்கறிஞர். ஆனால், அவர் தன் தொழிலை தியாகம் செய்து, மிக எளிமையான வாழ்வை கடைபிடித்தார்.
இப்படி பலரையும் குறிப்பிடலாம். ஏழைகள் மட்டுமின்றி, செல்வந்தர்களும், நாட்டிற்காக பல தியாகங்களை செய்துள்ளனர். அனைத்து தரப்பினரும் சேர்ந்து, ஜனநாயகத்தை
உருவாக்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
12-ஆக-201718:05:21 IST Report Abuse
Sundar His statement is justified
Rate this:
Share this comment
Cancel
s.f.edison - chennai,இந்தியா
12-ஆக-201717:48:18 IST Report Abuse
s.f.edison ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பதிவு வகித்த தலைவர்கள் நடந்து வந்த பாதை சிறப்பானதாகவும், தியாகம் மிகுந்தும் , அப்பழுக்கில்லாத நேர்மையுடனும், உண்மை பேசியும், திறமையான மக்கள் நல பணியில் சிறந்து விளங்கினார்கள். பொய்யையும் ,ஏமாற்று விதையும் கற்றுக்கொண்டு பெரிய பதவிக்கு வந்திருப்பது நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் பெருமை கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-ஆக-201716:47:56 IST Report Abuse
r.sundaram நேரு குடும்பம் விடுதலை போராட்டத்தின்போது எவ்வளவு செலவு செய்ததோ அதை மாதிரி பல மடங்குகள் சம்பாதித்து விட்டார்கள். நேருவால் வந்த வினைதான் காஷ்மீர் பிரச்சனையே. மக்களின் வரிப்பணம் ஆயிரம் ஆயிரம் கொடிகளாக அங்கே கொட்டப்படுகிறது. இன்னும் தீர்வு வரவில்லை. இதெற்க்கெல்லாம் அந்த குடும்பம் பதில் சொல்லுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X