பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கலெக்டர் பணிக்காக, 39 ஐ.ஏ.எஸ்., கள் காத்திருப்பு!
அமைச்சர்கள் ஆதரவில் அசையாத ஆட்சியர்கள்-

கோவை:தமிழகத்தைச் சேர்ந்த, 21 அதிகாரி களுக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து தரப்பட்டுள்ள தால், கலெக்டர் பணிக்காக காத்திருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை, 39 ஆக உயர்ந்துள்ளது.

 கலெக்டர் ,Collector, ஐ.ஏ.எஸ்., IAS, அமைச்சர்கள் ,Ministers, கோவை, Covai, தமிழகம், Tamilnadu, மத்திய அரசு , Central Government, தாசில்தார்,Tasildar, வளர்ச்சி பணிகள் , development activities,  மதுரை,Madurai, சேலம், Salem, திருவள்ளூர், Tiruvallur, கரூர், Karur, திருப்பூர்,Tirupur,  தேனி,  Theni, விழுப்புரம், Villupuram, சிவகங்கை,Sivagangai,  ராமநாதபுரம், Ramanathapuram,

ஒவ்வொரு ஆண்டிலும், ஐ.ஏ.எஸ்., பணியில் ஏற்படும் காலியிடத்தைப் பொறுத்து, அந்தந்த மாநிலங்களில் இருந்து, மாநில அரசால் பரிந் துரை செய்யப்படும் அதிகாரிகளுக்கு, மத்திய அரசால் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அளிக்கப் படுகிறது.

ஜனாதிபதி ஒப்புதல்


இதன்படி, ஓராண்டில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துக்கு தகுதி பெறுவோர்க்கு, அதற்கு அடுத்த ஆண்டு ஆக., 15க்குள், இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; அல்லது அந்த ஆண்டு இறுதிக்குள் ளாவது ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து தரப்படுவதே வழக்கம்.

ஆனால், தமிழகத்தில், 2014ல், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டியவர்களுக்கே, இந்த ஆண்டு வரை, அதற்கான அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந் தது. அதேபோன்று, 2015, 2016ம் ஆண்டுகளில், இதற்கு தகுதி பெற்ற அதிகாரிகளுக்கும், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து தரப்படாமல் தாமத மாகி வந்தது.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த, 21 அதிகாரி களுக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்க,

ஜனாதி பதி ஒப்புதலுடன், நேற்று முன்தினம் அரசாணை வெளியாகி யுள்ளது.

கடந்த, 2014ம் ஆண்டில், 10 பேர்; 2015ல் ஒன்பது; 2016ல் இரண்டு என, 21 பேர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இனி இவர் களுக்கு, மாநில அரசால் கலெக்டர் பணியிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில், ஏற்கனவே நேரடி, ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வு பெற்ற அதிகாரிகள் 18 பேர், 2011ல் இருந்து கலெக்டர் பணிக்காகக்காத்திருக்கின்றனர். இப் போது, இவர்களையும் சேர்த்து, 39 அதிகாரி களுக்கு, கலெக்டர் பணியிடங்களை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.ஆனால், மாநிலத்திலுள்ள முக்கி யமான மாவட்டங்கள் அனைத்திலும், தற்போது கலெக்ட ராக இருப்பவர்கள், குறைந்தபட்சம், நான்கில் இருந்து எட்டு ஆண்டுகள் வரை, நகராமல் இருக் கின்றனர். இவர்களில் சிலர், மாவட்டம் மாற்றப்பட் டாலும், தொடர்ந்து கலெக்டராகவே பணியில் இருக்கின்றனர்.

தலையாட்டி பொம்மைகள்


அமைச்சர்கள் பலரும்,தங்களது மாவட்டங்களில், 'தலையாட்டி பொம்மை'களாக உள்ள அதிகாரிகளை, கலெக்டராக வைத்திருப்பதே, இதற்கு காரணம். சாதாரண பணியிடம் முதல் தாசில்தார் பணி மாறு தல் வரை, அனைத்து விஷயங்களிலும், சம்பந்தப் பட்ட அமைச்சர்களின் கண் அசைவுக்காக காத்தி ருக்கும் காரணத்தாலேயே, இந்த அதிகாரிகள், தங்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்.

ஆளுங்கட்சியினருக்கு ஒத்துப்போவதால், சிலர் நன்கு சம்பாதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால், இவர்களுடைய மோசமானநிர்வாகத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்ற னர். அரசின் பல்வேறு திட்டங்களும் மக்களைச் சென்ற டையாமல் உள்ளன; வளர்ச்சி பணிகள் தேக்க மடைந்துள்ளன.

அனுமதியற்ற கட்டடங்கள், விதிமீறல் விளம்பரங் கள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, நில ஆர்ஜிதத்தில்

Advertisement

தாமதம், மக்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டிய சேவை களுக்கு லஞ்சம் என, பல விஷயங்களில், இந்த கலெக்டர்களின் நிர்வாகத் திறமையின்மை, அக்கறையின்மை காரணமாக, நிர்வாகம் ஸ்தம்பித்து, அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

ஆனால், இத்தகைய அதிகாரிகளையே ஆளுங் கட்சி யினர் விரும்புகின்றனர். கோவை, மதுரை, சேலம், திருவள்ளூர், கரூர், திருப்பூர், தேனி, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணி யாற்றும் கலெக்டர்கள், மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, இந்த பணியில் தொடர்வ தாக, இளம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கோரிக்கை


தற்போதுள்ள ஆட்சி தொடரும் வரை, தங் களுக்கு கலெக்டராகும் வாய்ப்பு, கனவாகவே இருக்கும் என்பதே, இவர்களின் குமுறலாக உள்ளது. இதை நிரூபிப்பதைப் போலவே, இந்த ஆட்சியின் அணுகுமுறையும், பல்வேறு மாவட்ட கலெக்டர்களின் நடவடிக்கைகளும் உள்ளன.தகுதி யற்ற பல, ஐ.ஏ.எஸ்., அதிகாரி களை தகுதி நீக்கம் செய்தது போல, இவ் விஷயத்திலும் மத்திய அரசு தலையிட வேண் டும் என்ற கோரிக்கையை, பிரதமருக்கு அனுப்பவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் ஆலோசித்து வருகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-201716:35:54 IST Report Abuse

அப்பாவிஐ ஏ எஸ் அதிகாரிகள் என்ன ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா? இதே சாக்கடையிலிருந்து வருபவர்கள் தானே?

Rate this:
12-ஆக-201712:29:17 IST Report Abuse

க.க.முருகேசன்இந்த நாடு உருப்படாமல் போவதற்கு காரணமே தகுதியற்ற நபர்களை பதவியில் வைத்திருப்பதும், திறமையுள்ள நேர்மையான நபர்களை புறக்கனிப்பதும் தான்

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஆக-201709:37:47 IST Report Abuse

Lion Drsekarஇன்றைக்கு நாட்டை ஆள்வதற்கு கல்வித் தகுதியே தேவை இல்லை, மிகப் பெரிய குடும்பம் மட்டும் இருந்தாலே போதும், இந்த நாட்டையே சூறையாடிவிடலாம். படித்தவர்கள் அனைவரும் இவர்களுக்கு கீழே வேலை செய்துதான் ஆகவேண்டும், இதுதான் ஜனநாயகம், வந்தே மாதரம்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X