அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்கள் ஆதரவு இல்லாமல் அரசு நடக்காது: வெற்றிவேல்

Added : ஆக 12, 2017
Advertisement

சென்னை: ''எங்கள் ஆதரவு இல்லாமல், இந்த அரசு நடக்காது,'' என, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறினார்.

அவர் கூறியதாவது: பொதுச்செயலரை அனைவரும் சேர்ந்து நியமித்தோம்; அவர், துணை பொதுச்செயலரை நியமித்தார். அவர்கள் நியமனத்தை, ஐந்தாறு பேரிடம் கையெழுத்து வாங்கி, செல்லாது எனக் கூற முடியாது. கட்சியில் குடுமிப்பிடி சண்டை இருந்தால், தி.மு.க., சார்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவர். எங்கள் முடிவை, அப்போது தெரிவிப்போம். எங்கள் ஆதரவு இல்லாமல், இந்த அரசு நடக்காது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்துள்ள ஒரே முதல்வர், பழனிசாமி தான். தினகரனை பதவி நீக்கம் செய்ய, அவருக்கு அதிகாரம் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X