அரசியல் செய்தி

தமிழ்நாடு

நன்றி மறந்த முதல்வர் : ஆம்பூர் எம்.எல்.ஏ., ஆவேசம்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement

ஆம்பூர்: நன்றியை மறந்து முதல்வர் செயல்படுவதாக, வேலுார் மாவட்டம், ஆம்பூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியன் கூறினார்.

தினகரன் அணியில் உள்ள அவர், நேற்று அளித்த பேட்டி: 'அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பதவியை தினகரன் வகிப்பது செல்லாது' என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த, ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஜெ., மறைவுக்குப் பின், பன்னீர்செல்வம், பழனிசாமி அணிகளைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தலை ஏற்று, பொதுச் செயலர் பதவி வகிக்க, சசிகலா ஒப்புக் கொண்டார்.கூவத்துாரில் தங்கி இருந்த, எம்.எல்.ஏ.,க்களிடம், 'பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்' என, சசிகலா கேட்டுக் கொண்டார். பழனிசாமி முதல்வராக இருக்க காரணம், சசிகலா. ஆனால், நன்றியை சுத்தமாக மறந்து, முதல்வர் செயல்படுகிறார்.
அ.தி.மு.க., கட்சி விதிப்படி, பொதுச் செயலர் எடுக்கும் முடிவு தான் இறுதி. நிர்வாகிகள் எடுக்கும் முடிவை ஏற்க இயலாது. இது, அடிமட்ட தொண்டர்கள் முதல், நிர்வாகிகள் வரை, அனைவருக்கும் தெரியும். தற்போது நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது. பொதுச் செயலர் மற்றும் துணைப் பொதுச் செயலர் எடுக்கும்
முடிவின் அடிப்படையில், எங்கள் அடுத்தகட்ட
நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
12-ஆக-201708:08:45 IST Report Abuse
Giridharan S என்னங்க இவருக்கு முதல்வர் எதாவது வாக்குறுதி குடுத்துட்டு அதை செய்யாமல் போய்ட்டாரா. எப்படியெல்லாம் பேசறாங்க பாருங்க இவங்களெல்லாம். தன்னலம் மிக்கவர்கள் சுயநலம் கொண்டவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X