தனிப்பட்ட முடிவு அல்ல!

Added : ஆக 12, 2017
Advertisement
தனிப்பட்ட முடிவு அல்ல!

பீஹாரில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்தது தொடர்பான முடிவை, தனிப்பட்ட முறையில், நானே எடுத்ததாக, சரத் யாதவ் போன்றோர் கருதுகின்றனர். அந்த முடிவை, கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் சேர்ந்து தான் எடுத்தோம்.

நிதிஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்

லாலுவிடம் கேட்கலாமே?

ஐக்கிய ஜனதா தளத்தின் கொள்கைகளுக்கு, நிதிஷ் குமாரால் களங்கம் ஏற்பட்டதாக, சரத் யாதவ்
கூறுகிறார். இந்த விஷயத்தில், நிதிஷ்குமார் மீது மட்டும் குற்றம் சுமத்தும் அவர், லாலு மற்றும் அவரது மகன்கள் செய்த ஊழல்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்?

சுஷில் குமார் மோடி, பீஹார் துணை முதல்வர், பா.ஜ.,

மோடியை நம்புகிறோம்!

ஜம்மு - காஷ்மீரில், நாங்கள், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த போதே, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என, உறுதியாக கூறிவிட்டோம். இப்போது, பிரதமர் மோடியை சந்தித்து, அதை நினைவுபடுத்தினேன். இந்த விஷயத்தில், பிரதமர் மோடி மீது, எங்கள் கட்சி நம்பிக்கை வைத்துள்ளது.

மெஹபூபா முப்தி, காஷ்மீர் முதல்வர், மக்கள் ஜனநாயக கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X