அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூல்: ஆம்னி பஸ்கள் குறித்து அமைச்சர் ஆய்வு

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (18)
Share
Advertisement
அதிக கட்டணம் வசூல், High fare collection,ஆம்னி பஸ்கள், omni buses,அமைச்சர், minister, ஆய்வு, Inspection,சென்னை,Chennai, கிருஷ்ண ஜெயந்தி, Krishna Jayanti,  சுதந்திர தின விடுமுறை , Independence Day Vacation, பள்ளி,  School, கல்லூரி, College,மாணவர்கள், Students, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,  Transport Minister MR Vijayabaskar, போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி , Transport Commissioner Veerapandi,

சென்னை:வருகிற 14-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி மற்றும் 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உள்பட பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று கிளம்பினார்கள்.


11 ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

இதனை பயன்படுத்தி பல ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சென்னை கோட்ட போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி ஆகியோர் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அதிக கட்டணங்கள் வசூலித்ததாக 11 ஆம்னி பஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டன. இதில் அதிக கட்டணத்தை திருப்பிக்கொடுத்த பஸ்கள் தங்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஆக-201714:26:52 IST Report Abuse
Pasupathi Subbian சாலையில் செல்லும் பஸ்களில் நடக்கும் கொள்ளையை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், ரயில்வேயில் சிறப்பு ரயில்கள் என்று சில தடங்களில் விட்டு சிறப்பு கட்டணமாக மும்மடங்கு அதிகம் வசூலிப்பதும், அந்த ரயில் பெட்டிகள் ஓட்டை உடைசல் , மற்றும் சாதாரண தரத்தை விட தாழ்ந்ததாகவும் இருக்கிறதே அதை பற்றி யாரும் குறைகூற வில்லையே. அதேபோல விமானங்களில் கடைசி நேர பயணத்திற்கு பல்லாயிரம் ரூபாய் அதிகம் கட்டணம் வசூலிப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லையே.
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
12-ஆக-201713:59:45 IST Report Abuse
Varun Ramesh லஞ்சமும் ஊழலும் ஒழிந்தால் மட்டுமே நீதிப்பரிபாலனமும் சரியாக இயங்கும். ஆம்னி பஸ் ஆப்பரேட்டர்களும் லஞ்சத்தால் பாதிக்கப்படுகிறவர்களே. லஞ்சத்தால் பாதிப்பிற்குள்ளாகும் எவரும் நஷ்டத்தை பொது மக்கள் தலையில் மட்டுமே கட்டுவார்கள். அமைச்சரும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் லஞ்சமில்லா நிர்வாகத்திற்கு உத்தரவாதம் தர முடியுமா? ஏதோ, மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப்போல் அவ்வப்போது இது போன்ற நாடகங்களை நடத்துவது இவர்களின் வாடிக்கை.
Rate this:
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-201713:32:06 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி கமிஷனுக்காக ஓர் ஆய்வு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X