பொது செய்தி

இந்தியா

அசாமில் காந்தி சிலை அகற்ற முடிவு: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (64)
Share
Advertisement
அசாம்,Assam,  காந்தி சிலை, Gandhi statue, சமூக ஆர்வலர்கள், social activists,  கண்டனம், condemnation, புதுடில்லி, New Delhi, மகாத்மா காந்தி, Mahatma Gandhi,  கவுகாத்தி ,Guwahati, சரினியா ,Sariniya ராம்கிந்தார்,  Ramkinder, துணை கமிஷனர் , Deputy Commissioner,

புதுடில்லி:அசாம் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சிலையை அகற்றும் கவுகாத்தி நிர்வாகத்தின் முடிவுக்கு அம்மாநில கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்தில் உள்ள சரினியா மலையில் காந்தி மண்டப தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ராம்கிந்தார் வடிவமைத்த மகாத்மா காந்தியின் சிலையை அங்கிருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. துணை கமிஷனர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.சிலை காந்தியின் உருவத்தை போன்று இல்லை என்பதால் அகற்றப் போவதாக கூறி கவுகாத்தி மாவட்ட நிர்வாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் சிலையை அகற்றும் கவுகாத்தி நிர்வாகத்தின் முடிவுக்கு அம்மாநில கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.தற்கால கலை பற்றிய புரிதல் இல்லாமை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கலைஞர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு சிலை என்பது அப்படியே தத்ரூபமாக இருக்க வேண்டிய அவசியமில்லை கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
12-ஆக-201719:39:30 IST Report Abuse
srisubram நீங்கள் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் மகாத்மாவை பற்றி பிதற்றலாம் .. ஆனால், அவரது தூய வாழ்வை யாராலும் வாழ இயலாது . பிதற்றலின் உச்சம் , சசிகலா & காந்தி . வேதனைக்குரிய விஷயம் .. நான் இங்கு காந்தி அவர்களின் வாழ்க்கையில் நடந்த இருவேறு சம்பவங்களை பதிவிடுகிறேன் . ஒன்று பிரிட்டிஷ் மன்னர் அவரை இங்கிலாந்துக்கு வரவேற்று , பின்னர் வட்ட மேஜை மாநாட்டுக்கு செல்லும்போது மன்னர் அவர்கள் காந்தியை அரையாடை பிச்சைக்காரன் என்றார் , காந்தி அவர்கள் தனது கோபத்தை காட்டாமல் மன்னர் அவர்களே நான் உங்கள் விருந்தாளி என்று பொருள்பட அமைதியாக கூறினார் . இதை நீங்கள் இன்று அரசியல் வாதிகளை விட்டு தள்ளுங்கள் , தனி ஒரு மனிதரிடம் இவ்வாறு நடந்துகொள்ள முடியுமா ? இரண்டாவது சம்பவம் : நவகாளி யாத்திரை சமயம் ஒருவன் ஐயா நான் பாவி ஒரு குழந்தையை கொன்றுவிட்டேன் என்றான் , அவர் வுடனே நீ உன்மத்தம் பிடிச்சு செய்த செயல் , ஆதலால் மீண்டும் உன்மத்தம் கொண்டு இத்தகைய செயல்கள் செய்யாமல் , இரு அனாதை குழந்தைகளை வளர் என்று கூறினார் .அவனும் உடன்பட்டு இரு குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தான் . இதை இன்று யாராவது செய்ய முடியுமா ? ஐன்ஸ்டின் அவர்கள் அன்றே கூறியுள்ளார் , வரும் சந்ததியினர் இப்படி ஒருமனிதன் இந்த உலகத்தில் ரத்தமும் சதையுடன் உலவினார் என்பது நம்புவது கடினம் என்று . ஆனால் இங்குள்ள மக்கள் இப்படி தூற்றுவார்கள் என்று தெரியவில்லை .
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
12-ஆக-201718:58:15 IST Report Abuse
Selvaraj Thiroomal அன்சாரி பேசியது உண்மைதானென்று நிரூபிக்க அஸ்ஸாம் பாஜக முடிவெடுத்துள்ளது, வெங்காயம் தான் இதற்கு என்ன பக்குவமாக பதில் போடுவார்.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
12-ஆக-201718:14:51 IST Report Abuse
Sundar Most of the people not following principles of Ghandhi who got freedom. By seeing the statue of Ghandhi the people who are immoral and criminal in mind, may change their attitude of immoral and criminal. hence it need not to be removed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X