பொது செய்தி

இந்தியா

கைவிடப்படுகிறது 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி:பார்லி.,யில் மசோதா தாக்கல்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (33)
Share
Advertisement
8ம் வகுப்பு , 8th class, கட்டாய தேர்ச்சி, compulsory Pass,புதுடில்லி,New Delhi,  இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், Free Compulsory Education Act,  மாணவர்கள், Students,கல்வித்தரம், Quality of education,மத்திய அரசு, Central Government,  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா ,Ministry of Human Resource Development Deputy Minister Upendra Kushwaka,  மறுதேர்வு,Re-exam பாராளுமன்றம்,Parliament,

புதுடில்லி:கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை, மாணவர்கள் தோல்வி அடையாமல், கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.இந்தமுறை காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இதை கைவிட வேண்டும் என்றும் 24 மாநில அரசுகள் சமீபத்தில் கேட்டுக்கொண்டன.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கட்டாய தேர்ச்சி முறையை கைவிட கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கு கடந்த 3ந் தேதி ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், இந்த திருத்த மசோதாவை, நேற்று பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா தாக்கல் செய்தார்.
இதன்படி, 5 மற்றும் 8ம் வகுப்புகளின் ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை மாநில அரசுகள் 'பெயில்' ஆக்கலாம். அதற்கு முன்பு, மறுதேர்வு எழுத அம்மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Nadar - Mumbai,இந்தியா
12-ஆக-201718:12:58 IST Report Abuse
Mohan Nadar 5 ஆம் வகுப்பிற்கு பிறகு பாதி பேர் படிப்பை விடுவார்கள் , 8 வகுப்பிற்கு பிறகு பாதி பேர் படிப்பை விடுவார்கள் உயர் நிலை சமூகம் சந்திக்கும் சிறிய போட்டியை கூட காவி அரசு விரும்பவில்லை
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
13-ஆக-201700:04:50 IST Report Abuse
N.K உயர்நிலை சமூகம் ஒதுக்கீடு இல்லாமல் போட்டியை சந்திக்கிறது. 5, 8 தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் எழுதி வரட்டும் யாரும் தடுக்கவில்லை. முடியவில்லையென்றால் அப்பொழுதே தொழிற்கல்வியோ வியாபாரமா தொடங்கிக்கொள்ளலாம். இன்று பட்டதாரிகள் படும் அவஸ்தை எல்லாரும் படவேண்டியதில்லை....
Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-ஆக-201708:28:58 IST Report Abuse
பலராமன்உயர் நிலை சமூகம் சிறிய/பெரிய போட்டியை சந்திக்க என்றும் பயம் கொண்டதில்லை....உயர் நிலை சமூகத்திற்கு அந்த சலுகையும் இல்லை இன்றும் அவர்கள் தான் படிப்பில் முதலிடம்.....எல்லா சலுகைகளும் 50 ஆண்டுகளுக்கு மேலாக பெற்றும் இன்னும் போட்டியிட தயங்குவது யாரென்றும் தெரியும்...
Rate this:
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
12-ஆக-201718:05:38 IST Report Abuse
Mohan Nadar நம்மள வைத்தே நம்ம கண்ணைக்குத்தும்... இல்ல... நம்மள வைத்தே நம்மளை புதைக்கும் சாணக்கிய சகுனி கும்பலிடம் நாடு சிக்கிருக்கிறது .. பாவம் மக்கள்.... இல்ல.. பக்தர்கள்
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
13-ஆக-201700:06:19 IST Report Abuse
N.K இதே வேலையே வேறு ஒரு பிரதமர் செய்திருந்தால் இப்படியெல்லாம் சொல்ல மாட்டீர்கள். என்ன செய்யப்பட்டுள்ளது என்பது தான் முக்கியம், யார் செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை....
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-ஆக-201713:37:58 IST Report Abuse
S.Baliah Seer ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இதை ஐந்தில் விளையாதது ...என்றும் சொல்வார்கள். இளமையில் கற்பது ஆரோக்கியம்.தேர்வு தேவையானது. மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்.ஆனால் ஐந்து வயதுக்கு முன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முறையை தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X