அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் செயல் ஏமாற்று வேலை : -தங்கதமிழ் செல்வன் பேச்சு

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (2)
Advertisement

மேலுார்; மதுரை மாவட்டம் மேலுாரில் அ.தி.மு.க., தினகரன் அணி சார்பில் ஆக.,14ல் பொதுக்கூட்டம் நட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் நேற்று பார்வையிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய பிரமான பத்திரத்தில் பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் தினகரன் தலைமை நிலைய செயலாளர் கையெழுத்திட்டவர், தற்போதுஏற்க மறுப்பது ஏமாற்று வேலை. பொதுச்செயலாளருக்கு மட்டுமே கட்சியில் ஒருவரை நீக்கவோ, சேர்க்கவோ அதிகாரம் உண்டு. இந்நிலை தொடர்ந்தால் நிறைய பேருடைய பதவி பறிபோகும். தினகரனை நீக்கிய செய்திகேட்டு பழனிசாமி அணியினர் எங்களுடைய பேச்சு வார்த்தைக்கு பாதி சம்மதத்திற்கு வந்துள்ளனர் என பன்னீர் செல்வம் கூறியது மனவேதனையளிக்கிறது. அ.தி.மு.க., ஆட்சி ஊழல் ஆட்சி, நிர்வாகம் சரியில்லாத ஆட்சி, ஜெ., சாவில் மர்மம் என்று கூறும் பன்னீர் செல்வத்தை மன்றாடி சேர்க்க வேண்டிய சூட்சுமம் என்ன என்று தெரியவில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
12-ஆக-201713:40:38 IST Report Abuse
Giridharan S EPS ஒன்றும் மன்றாடி அவரை சேர்க்கவில்லை. தமிழகத்தில் நல்ல ஆட்சி அம்மா ஆட்சி நடைபெறவேண்டும் என்றுதான் அவர் பாடு படுகிறார். இப்படியே பேசிட்டு இருங்க கொஞ்ச நாளில் காணாம போயிடுவீங்க. ஒழுங்கா திருந்தி வாழுங்க
Rate this:
Share this comment
Cancel
12-ஆக-201712:22:45 IST Report Abuse
அப்பாவி கிரிமினல்கள் ஜெயிலிலிருந்து ஆட்சி செய்ய இடம்கொடுப்பது இந்தியாவில் மட்டுமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X