'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது' | 'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பார்சல்,Parcel வரி,Tax, ஜி.எஸ்.டி,GST, புதுடில்லி, New Delhi,ஏசி ஓட்டல்கள், AC Hotels, பார்சல் உணவு, Parcel Food,சரக்கு மற்றும் சேவை வரி,Goods and Service Tax, மத்திய அரசு,Central Government, நட்சத்திர ஓட்டல்கள், Star Hotels,

புதுடில்லி: 'ஏசி ஓட்டல்களில் இருந்து, வீடுகளுக்கு வாங்கி செல்லும், 'பார்சல்' உணவுக்கும், 18 சதவீத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஜி.எஸ்.டி.,:

நாடு முழுவதும், ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிட, 28 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.


விளக்கம்:

'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதி உடைய, ஓட்டல்கள், மற்றும் மதுபான விடுதிகளுக்கு, 18 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. 'ஏசி' வசதி இல்லாத ஓட்டல்களுக்கு, 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.எனினும், 'சில ஏசி ஓட்டல்களில், ஒரு தளத்தில் ஏசி பயன்பாடு இல்லை' என கூறி, 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.


பார்சலுக்கும் ஜி.எஸ்.டி.,:

இது குறித்து நேரடி வரிகள் வாரியம் கூறியதாவது: ஏசி ஓட்டல்களில், ஒரு பகுதியில் மட்டும் ஏசி வசதி இல்லை என கூறி, 18 சதவீதத்திற்கு பதில், 12 சதவீத வரி வசூலிப்பதை ஏற்க முடியாது. அங்கிருந்து, 'பார்சல்' உணவு வாங்கி சென்றாலும், அதற்கும், 18 சதவீத வரி கட்டாயம் வசூலிக்க வேண்டும். ஓட்டலில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏசி வசதி இருந்தாலும், அங்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (66)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201717:18:55 IST Report Abuse
Endrum Indian எப்படியெல்லாம் எல்லாவற்றிலும் கோணங்கித்தனம் பண்ணலாம் என்று அலைந்து கொண்டிருக்கும் போல இருக்கின்றது இவர்கள் செய்கை.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஆக-201715:54:38 IST Report Abuse
g.s,rajan Indha Nadum nattu makkalum Nasamaap pogattum..
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-ஆக-201715:21:53 IST Report Abuse
Vijay D Ratnam நம்மாளுங்க ஒரு காரியத்துக்கு லஞ்சம் கொடுக்க, கமிஷன் கொடுக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டாங்க. ஆனால் அரசாங்கத்துக்கு வரி கட்டுவது என்றால் அப்படியே பொங்கி எழுந்துடுவாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X