பள்ளிகளில் ஒரு கல்விப் புரட்சி-2| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப் புரட்சி-2

Updated : செப் 15, 2017 | Added : ஆக 14, 2017
பள்ளிகளில் ஒரு கல்விப் புரட்சி

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படை யில் தான் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட் டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


03.Prof.M.MANIKANDAN.,M.E.,Ph.D, Assistant Professor, salem
(manimmk9792@gmail.com)

I am eagerly waiting for the opportunity to work in the group for setting up of autonomous board &schools regarding. If i have an opportunity i would be very grateful to participate in this board.


1. producing or granting autonomous to the schools should strictly
follow the rules as prescribed by the committee.
2. It should have the rights to demerit or cancellation if no outcome is produced.
3. educating syllabus should inculcate with the engineering/ medicine/ arts/ agriculture/ cultures and it should meet the standards of all dis cipline of CBSE/ICSE.
4. Facilities should be adequate and should provide the prescribed space of class rooms,lab equipments,sports facilities,yoga...
5. Outcome based education should be evaluated once in every 3 months.an auditing should be done once in every 6 months.
6. Suggestions from various sectors like industry, culture, social, economics, engineering and medicinal,parents,stake holders,etc.,
7. The qualification of faculty can be increased to higher standards for the autonomous boards.
8. autonomous should be given only to the eligible schools and who meets out the criteria levels.
9. committee should be very strict enough and no money should play a role..தினமலர் விளக்கம்: தன்னாட்சி பற்றி கருத்து தெரிவிப்பதோடு மட்டுமின்றி அதில் பங்குபெற விரும்பும் தங்கள் ஆர்வத்தை வரவேற்கிறோம்.
தன்னாட்சி செயல்படுத்தப்படும் நிலையில் எமது பள்ளிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் பொழுது - உறுதியாக, தரத்தின் அடிப்படையில் தேர்வு நடக்கும் பொழுது எமது பள்ளிக்கு வாய்ப்பு கிடைப்பதில் அநேகமாக தடையிருக்க வாய்ப்பில்லை - உங்கள் விருப்பத்தை நம் கருத்தில் கொள்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோன்று, தன்னாட்சி பெறும் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் கல்வியாளர்களின் குழு உறுதியாக அரசு நிர்ணயித்திருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள். புதுப் பாடத்திட்டம் கொண்டு வருவதில் அரசு வெளிப்படுத்தும் அக்கறை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குழுவிற்கு தரமிழந்த பள்ளியின் தன்னாட்சியை நிறுத்தி வைக்கும்படி அரசுக்கும் சிபாரிசு செய்யும் அதிகாரம் உண்டு. தன்னாட்சியின் அடிப்படை நோக்கமே நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் நீட் போன்ற பொதுப் போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளும்படி வளர்ப்பதுதான், தவிர, தன்னாட்சியின் விளைவாக ஏற்படும் தரவுயர்வு, மாணவர்களிடம், மற்றும் பெற்றோர்களிடம் இன்று இருக்கும் இஆகுஉ மோகம் மறைந்துவிடும் வாய்ப்பு அதிகம். தன்னாட்சிக்குத் தகுதியான பள்ளிகளைத் தேர்வு செய்யும்பொழுது, அந்த நிபுணர் குழு, பள்ளியின் உள் கட்டமைப்பு உட்பட அத்தனை வசதிகள் போதுமான அளவிற்கு இருக்கிறதா என்று கவனமுடன் பார்த்துக் கொள்ளும். மூன்று மாதத்திற்கு ஒருதடவை, அல்லது ஆறு மாதத்திற்கு ஒருதடவை என்பது அரசு எடுக்கவேண்டிய முடிவு தவிர தன்னாட்சிக் கல்லூரிகள், விதிமுறைகளைச் சரியான முறையில் தொடர்ந்து பின்பற்றுகின்றனவா என்று குறிப்பிட்ட கால அளவில் க்எஇ கண்காணிக்கும். அதே முறையைப் பின்பற்றிப் பள்ளிகளின் செயல்பாடும் கவனிக்கப்படும். தன்னாட்சிப் பள்ளிகளில் பாடத்திட்டக் குழுக்கள் அமைக்கப்படும் பொழுது உரிய துறைகளிலிருந்து வல்லுநர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலும், தன்னாட்சிக் கல்லூரிகளில், பாடத்திட்டக் குழுவில் அந்தந்த கல்லூரியில் உள்ள உயர்ந்த கல்வித் தரம் பெற்றுள்ளவர்களையே கல்லூரி நிர்வாகம் சேர்த்துக் கொள்ளும். அதே முறையைத் தன்னாட்சிப் பள்ளிகளும் பின்பற்றும் என்று உறுதியாக எதிர்ப ார்க்கலாம்.தன்னாட்சி வழங்கத் தேர்வு செய்யும் பொழுது, விதிமுறைகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்; பணத்தின் பாதிப்பு இருக்கவே கூடாது என்ற தங்கள் கருத்தில் எங்களுக்கும் முழு உடன்பாடு. தவிர, இன்றைய சூழலில் பணத்தின் பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அநேகமாக இருக்காது என்று நினைக்கிறோம்.


04.SENTHILKUMAR
(senthilkumar22590@gmail.com)

தந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தம் எதை குறிக்கும் தெரியுமா? அவனவன் விருப்பம் போல் கல்வியில் கொள்ளையடிக்கலாம்; கட்டணத்தை உயர்த்திக் கொள்ள லாம் என்று அர்த்தம். ஆகையால் கல்வியை மட்டும் அரசு முழு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

தினமலர் விளக்கம்: கல்விக் ஒரு வியாபாரமாகி, கொள்ளையடிக்கப் படுகிறது என்ற தங்களின் கோபம் எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. இதில் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தைக் கொண்டு, ஒரு சுயநிதி கல்லூரி நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அரசின் பண உதவியேதுமின்றி, கல்லூரி நடத்துவதில் இயல்பாக உள்ள அத்தனை செலவுகளை செய்து, திறம்பட இயங்க வேண்டுமென்றால் அது முடியாத ஒன்றாக இருக்கிறது. நிர்வாகிகள் வேற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்கின்றனர். இங்கேதான் நீங்கள் கவனிக்க வேண்டியது: நியாயமான உயர்வு அக்கடணத்தில் இருக்கிறதா, அல்லது பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதன்பிறகும் கல்லூரியில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிறதா என்று. அப்படியொரு சூழலில் அநியாயமாக கல்வியை வியாபாரமாக்கி அதில் லாபம் சம்பாதிக்கின்ற கல்லூரியை தங்களைப் போன்றவர்கள் தவிர்க்கத் தொடங்கினால், காலப்போக்கில் அவ்வகை கல்லூரிகளும் நியாயமான கட்டண உயர்வை தேர்ந்தெடுத்துக் கொள்ளும், அல்லது மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து கல்லூரி இல்லாமல் ஆகிவிடலாம். இன்னுமொரு கருத்து. அநியாயமாக கல்விக் கட்டணம் வசூலித்து இருக்கிறது என்றால், எல்லாக் கல்லூரிகளும் அப்படித்தான் முடிவெடுக்க முடியாது. நியாயமான கல்லூரிகளும் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் உரிய டிக்கட் இன்றி இரயில்பயணம் செய்கிறார்கள். உண்மைதான். ஆனால் அத்தனைப் பயணிகளும் அப்படி இருக்க முடியாது. அதே போலத் தான் கல்லூரிகளும். நாங்கள் தெரிவித்துள்ள மற்றொரு கருத்து, கல்வி அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது. பதிமூன்று ஆண்டுகளாகப் பாடத்திட்டம் மேம்படுத்தப் படாமல் இருந்திருக்கிறது கல்வித் தறை. எந்தவொரு கல்வியாளர்களும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறோம். இது தவிர அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் போக்குவரத்துத் துறை எப்படி இருக்கிறது என்பது வெளிப்படை. அரசு பேருந்துகளின் பராமரிப்பைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், அரசின் முழு கட்டுப்பாடு சரியாக இருக்கும் என்று படவில்லை. மாறாக, அதனுடைய சரியான கண்காணிப்பு இருத்தல் தேவை. அது போதுமானதாக இருக்கும் என்று தெரிகிறது.

தொடரும்


.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X