எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிசுபிசுப்பு..!
எதிர்பார்த்த எம்.எல்.ஏ.,க்கள் வராததால்
தினகரனின் முதல் கூட்டம் பிசுபிசுப்பு

முதல் பொதுக்கூட்டத்தில், அதிக, எம்.எல்.ஏ.,க்களை வரவழைத்து, முதல்வர் பழனிசாமி அணியினரை மிரட்டலாம் என நினைத்த, தினகரனின் திட்டம், பழனிசாமி அணியினரின் அதிரடி நடவடிக்கையால் பிசுபிசுத்தது.

தினகரன்,Dinakaran, எம்.எல்.ஏ., MLA,பொதுக்கூட்டம், Public meeting,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,  மதுரை, Madurai,மேலுார்,Melur,  பத்திரிகையாளர், journalist,அ.தி.மு.க,AIADMK, அரசியல் வாழ்க்கை,  political life, அமைச்சர்கள் , ministers,

முதல்வர் பழனிசாமி அணியினர், தங்கள் குடும்பத்தை, கட்சியில் இருந்து முழுமையாக நீக்குவதை தடுக்க, தினகரன் முடிவு செய்தார். அதற்காக, தனக்கு ஆதரவளித்த, 37 எம்.எல்.ஏ.,க்கள் உதவியுடன், முதல்வர் தரப்பை மிரட்டி பார்த்தார். ஆனால், பழனிசாமி அணியினர், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுத்தனர்.

அமைச்சர்கள் ஒருவர் கூட வரவில்லை.இதை தடுக்க, தினகரன், 20 எம்.எல்.ஏ.,க்களுக்கு, கட்சி பதவி வழங்கினார். மாவட்ட வாரியாக, சுற்றுப்பயணம் செல்லப் போவதாக அறிவித்தார்.தினகரன் அறிவித்தபடி,

நேற்று, மதுரை மாவட்டம், மேலுாரில், முதல் பொதுக்கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்திற்கு, அதிக, எம்.எல்.ஏ.,க்களை வரவழைத்து, கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதை காட்டவும், பழனிசாமி அணியினரை மிரட்டவும் முடிவுசெய்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி, எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை.
அமைச்சர்கள் ஒருவர் கூட வரவில்லை. பொதுக்கூட்டம் நடந்த, மேலுார், எம்.எல்.ஏ.,வும் வரவில்லை. அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்த, எம்.எல்.ஏ.,க்களில், பாதி பேர் கூட கூட்டத்திற்கு வரவில்லை. இதனால், தினகரனின் திட்டம் பிசுபிசுத்தது.
ஏமாற்றமடைந்த தினகரன், கூட்டத்தில் பேசுகையில், 'எம்.எல்.ஏ.,க்களை கடத்திச் சென்று ஒளித்து வைத்துள்ளனர்' என, குற்றஞ்சாட்டினார். தினகரனுடன் அதிக, எம்.எல்.ஏ.,க்கள் செல்லாதது, பழனிசாமி அணியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சொல்ல நினைத்ததை மறந்தார்'மேலுார் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி யார் என்பதை வெளிப்படுத்துவேன்' என, காலையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த தினகரன், மாலையில் நடந்த கூட்டத்தில், அதை சொல்ல மறந்து விட்டார்.

Advertisement


மதுரை, மேலுாரில், நேற்று காலையில், தினகரன், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், 'அ.தி.மு.க.,வில், திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி பழனிசாமி என்பவர் ஒருவர் இருந்தார். தொட்டியம் பழனிசாமி என்பவர், ஒருவர் இருந்தார். அதுபோல, இப்போது, ஒரு பழனிசாமி உருவாகி இருக்கிறார். அவர் யார் என்பதை, இன்று மாலை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன்' என்றார்.
முதல்வர் பழனிசாமியின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையை பற்றியும், அவரை பற்றி வெளிவராத தகவல்களையும், தினகரன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், பொதுக்கூட்டத்தில், தினகரன் பேசுகையில், முதல்வர் பழனிசாமி பற்றி, எந்த தகவலும் தெரிவிக்காமல், தன் பேச்சை முடித்தார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஆக-201713:06:40 IST Report Abuse

Cheran Perumalவாய்க்கு வந்ததை உளறுவதால் இவர் இந்த நிமிடம் சொன்னதை அடுத்த நிமிடம் மறந்துவிடுவார்.

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
15-ஆக-201714:01:51 IST Report Abuse

ezhumalaiyaanஎடப்பாடி பழனிசாமி யார் என்பது எடப்பாடி தொகுதி மற்றும் சேலம் மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். 6 வருடமாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவர் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமிருக்காது.

Rate this:
dina -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201713:55:18 IST Report Abuse

dinaGood headlines..

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X