உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று: ஹமித் அன்சாரி| Dinamalar

உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று: ஹமித் அன்சாரி

Updated : ஆக 16, 2017 | Added : ஆக 16, 2017 | கருத்துகள் (178)
உருது மொழி, Urdu language, முஸ்லிம் மக்கள், Muslim people,முன்னாள் துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, Former Vice President Amit Ansari, புதுடில்லி,New Delhi,  ஹமித் அன்சாரி,Hamid Ansari, மேற்கு வங்கம் ,West Bengal,  கனடா, Canada, அமெரிக்கா,USA, America, ஆஸ்திரேலியா , Australia,

புதுடில்லி: '' உருது மொழி முஸ்லிகள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று,'' என, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த உருது மொழிக்கான இணைய தள துவக்க விழாவில் ஹமித் அன்சாரி பேசியதாவது:


பல நாடுகளில் பேசப்படுகிறது

உருது மொழி என்பது முஸ்லிம் மக்கள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று. ஆனால், உருது மொழியை அரசியல் பிரச்னையாக்கி விட்டனர். முஸ்லிம் மக்களுக்கு மட்டுமானது உருது மொழி என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர்.
தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உருது மொழி பேசும் மக்களை எளிதில் அடையாளம் காண முடியும். கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருது மொழி பேசும் மக்கள் உள்ளனர்.
அன்றாட வாழ்க்கைக்கு உருது மொழி முக்கியமில்லை என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதற்காக அந்த மொழியை கற்க கூடாது என எந்த தடையும் இல்லை. இது தான் உருது மொழிக்கு உள்ள மிகப்பெரிய தடை. எனினும், மற்ற மொழிகளை விட உருது மொழியில் தெளிவாக கூறவும், விளக்கவும் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X