அரசியல் செய்தி

தமிழ்நாடு

நமது எம்.ஜி.ஆர்., ஆசிரியர் நீக்கம்?

Added : ஆக 16, 2017 | கருத்துகள் (30)
Advertisement
நமது எம்.ஜி.ஆர்.,Our MGR,Namathu MGR, நாளிதழ், newspaper,ஆசிரியர் மருது அழகுராஜ், editor Maruthu Alguraj,தினகரன்,Dinakaran, சர்ச்சை கவிதை, controversy poetry, பா.ஜ., BJP,மத்திய அரசு, central government, சென்னை,Chennai, அ.தி.மு.க., AIADMK,ஜெயலலிதா , Jayalalitha, சசிகலா , Sasikala, சித்ரகுப்தன் , Chitraguptan, மேலூர் பொதுக்கூட்டம், Melur public meeting,மதுரை,Madurai, விவேக் , Vivek ,கறுப்பு ஆடுகள், Black sheep,

சென்னை: மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்ததால் அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான, ' நமது எம்.ஜி.ஆர்' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


சர்ச்சை கவிதை

நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் பணிக்கு மருது அழகுராஜை, 2010ம் ஆண்டு ஜெயலலிதா நியமனம் செய்தார். தற்போது அந்த நாளிதழ் சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. அ.தி.மு.க., இரு அணிகள் தொடர்பாக, பா.ஜ., மேலிடம் சமரசம் செய்து வருவதாக பல மாதமாக கூறப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமை, நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில், ' காவி அடி, கழகத்தை அழி' என்ற தலைப்பில் சித்ரகுப்தன் என்பவர் எழுதியதாக ஒரு கவிதை வெளியானது. அதில், மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வாசகங்கள் இடம் பெற்றன. கடந்த திங்கட்கிழமை, மேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த தினகரனிடம் அந்த கவிதை குறித்து நிருபர்கள் கேட்ட போது,' கறுப்பு ஆடுகள் நீக்கப்படுவார்கள்' என்று சூசகமாக தெரிவித்தார். மேலும், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் நிர்வாகத்தை சசிகலாவின் உறவினர் விவேக் கவனித்து வருதாகவும் அவர் குறிப்பிட்டார்.


போனில் வந்த உத்தரவு

இந்த சூழ்நிலையில், அன்றைய தினமே மருது அழகு ராஜுவிடம், போயஸ் கார்டன் இல்ல மேலாளராக இருந்த பூங்குன்றன் போனில் பேசியுள்ளார். மருது அழகு ராஜை உடனடியாக விடுமுறையில் செல்லும்படி அவர் கூறினார் என தகவல் வெளியானது. இப்பிரச்னை குறித்து சென்னையில் இருந்து பேட்டி அளித்த தினகரனிடம் கேட்ட போது, ' இது நிர்வாக முடிவு. கட்சி கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர் நீக்கப்பட்டுள்ளார்' என, தெரிவித்தார்.Advertisement
வாசகர் கருத்து (30)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-ஆக-201710:57:35 IST Report Abuse
ஜெயந்தன் நல்ல தமிழ் பேசும் அதிமுகவினரில் இவர் சிறந்தவர்..." நான் போட்டால் தெரியும் போடு...தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு " என்று பிஜேபியை ஓட விட்டவர்...
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
17-ஆக-201710:54:03 IST Report Abuse
பொன் வண்ணன் பிஜேபி யை விளாசி சித்ர குப்தன் எழுதியது சூப்பரோ சூப்பர்..இவர் சித்ர குப்தன் அல்ல...எமன்..பிஜேபிக்கு ..இவரின் எழுத்தினால்
Rate this:
Share this comment
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
17-ஆக-201703:58:11 IST Report Abuse
Nagercoil Suresh எழுதி கொடுத்து பிரசுரப்படுத்த வைத்ததே தினகரன் தான் மாட்டியது நிருபர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X