சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி-3

Updated : செப் 15, 2017 | Added : ஆக 16, 2017
Advertisement
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படை யில் தான் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட் டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

5. Dr.S.THEENATHAYALAN., Dean of Academics and Research, Associate Professor and Head, Department of Economics and Centre for Research in Economics, The Madura College (Autonomous), Madurai - 625 011.

First of all I appreciate,congratulate and welcome your idea of conferring autonomous status for the schools in the near future in Tamil Nadu. I served in your Institution as visiting faculty at anandha maligai, K.K.Nagar later shifted to Elliarpatti for a period of one year. I met youon few occasions sir.

To have autonomous status for schools, first we must request the government of Tamil Nadu to start Universities exclusively to look after Higher Secondary Schools. The responsibility of the University is to monitor the academic performances of the schools periodically through Board of Studies and academic council for Designing curriculum. The syllabus for Higher Secondary Course must be revised once in three years on par with CBSE,ISCE and other Foreign Schools. The members in the Board of Studies to be drawn from Universities,Colleges,Schools,Industries,Notable Educationalists, Student Representatives,etc.Also see to that the University and State Government should provide equivalency certificate for thestudents who have studied the HSC course in Autonomous Schools.

Studentsmust be given opportunity to select the subjects desired by himself/herself. The autonomous schools should have a vision to incorporate the regional requirements with regard to the agriculture, industry and service sectors. Besides the schools which are willing to have autonomous status should provide world class infrastructural facilities in terms of quality and quantity. The designation of the head of the school must be The Principal instead of Head Master/mistress and the teacher may be redesignated as lecturer. The syllabus should satisfy and to develop knowledge, understanding, skill, application and thinking capacity of the students. Semester system should be introduced along with continuous internal assessment program. Students must be exposed in tune with social responsibility like CSR and ISR. There will not be any discrimination between arts and science group students with respect to marks in the internal and the annual/semester examinations.

I am prepared to share my ideas with respect to autonomous status for schools through your newspaper if you wish please. Also willing to help you in this regard. I wish you all the very best for the idea floated by you.

தினமலர் விளக்கம்: பள்ளிகளில் தன்னாட்சி என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு பாராட்டியதற்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தன்னாட்சி குறித்து தாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களில் நமக்கு உடன்பாடே. எனினும் அவற்றைக் குறித்து, சில வார்த்தைகள்:
தன்னாட்சி பள்ளிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு, ஒரு தனி பல்கலைகழகம் இருக்க வேண்டும் என்ற கருத்து நல்லதுதான். வரையறுக்கப்பட்ட தனி பொறுப்புடன் அந்தப் பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்க முடியும் என்ற தங்கள் எண்ணம் சரியானதுதான்.
இதைத் தொடர்ந்து, தன்னாட்சி பள்ளிகளுக்கான பல்கலைக்கழகம் ஆற்ற வேண்டிய கடமைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். அக்கடமைகளைச் சரியாக செயலாற்றும்போது, தன்னாட்சிப் பள்ளிகளில் தரம் உயர்வதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து நிலைபெற்றுவிடும் வாய்ப்பும் அதிகம்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள 'சமமான கல்விச் சான்றிதழ்' (Equivalency Certificate) பள்ளியளவில் எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் என்பதை விரிவாக விளக்கவும்.

பள்ளித் தலைமையாசிரியரை, 'முதல்வர்' என்றும், ஆசிரியர்களை, 'விரிவுரையாளர்கள்' என்றும் பணிப்பெயர் மாற்றம் செய்வது அரசின் லெ்லைக்குள் வரவதால், தன்னாட்சி கருத்துடன் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், தாங்கள் தங்களுடைய காரணங்களை முன் வைக்க எண்ணினால், நாங்கள் அதை வரவேற்கிறோம். தினமலர் எடுக்கும் ' பள்ளிகளில் தன்னாட்சி ' என்ற கருத்துக்கு வரவேற்பளித்ததோடு நின்று விடாமல், எங்களுக்கு மேலும் உதவ தாங்கள் தெரிவித்திருக்கும் ஆவலை வரவேற்கிறோம். அப்படியொரு சூழல் ஏற்படும்பொழுது, தங்கள் உதவியை உறுதியாக நாடுவோம்.

6. T.R.Malaiyappan, Pennadam, Cuddalore District.

As i mentioned the above subject, Comparing School Education in Other States Tamilnadu Education pattern and 1 to 12 th Standard subjects totally helpless for our students. They never more awareness for the current technologies all over world. So from 1 to 12 th standard students must learn Computer Science as a separate paper and must get the practical knowledge in computers because of they never do the work in feature without computer assistance. Must add the computer science as sixth book otherwise.

we can remove the social science because now a days social science in never support for students growth. Smart classes must be use for all levels of students because its surely help for the new innovations idea and listening subjects. So must regulate the computer science for 1 to 12 th as separate book also select the teachers for computer science B.Ed holders for teaching the computer science subject and practical session is very very must because other subject teachers surely they will not teach computer science subject usefully for our students the reason is they never get more knowledge about the computer science subject. Moreover Computer Science B.Ed finished graduates more peoples for waiting their jobs for long years.

So we must regulate the Computer Science subject in tamilnadu government schools from 1 to 12 th standards as compulsory separate book.

தினமலர் விளக்கம்: பள்ளிகளில் தன்னாட்சி செயல்படத் தொடங்கும் பொழுது, அதனுடைய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் (Computer Science) கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளீர்கள். தினமலர் அதை வரவேற்கிறது.

ஆனால் கணினி அறிவியலைச் சேர்ப்பதற்காக, தேவைப்பட்டால் சமூக அறிவியலை நீக்கலாம் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், தினமலருக்கு வந்திருக்கும் கடிதங்களில் பலர், சமூகப் பொறுப்புணர்ச்சி வளர சமூக அறிவியல் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம.

கணினி அறிவியல் பாடத்தை கணினி அறிவியல் படித்தவர்கள்தாம் நடத்த வேண்டும்; அதைப் படித்த பலர் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளது, பாடத்திட்டத்தில் தங்களுக்குள்ள அக்கறையும், வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்ற தங்கள் எண்ணமும் பாராட்டிற்குரியது.

-தொடரும்


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X