பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு 'போட்டோ' பயிற்சி

Added : ஆக 19, 2017
Advertisement
   குழந்தைகளுக்கு 'போட்டோ' பயிற்சி



ஊட்டி, உலக புகைப்பட தினத்தையொட்டி, ஊட்டி தாவரவியல் பூங்காவில், 60க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு, 'போட்டோ' பயிற்சி அளித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலக புகைப்பட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், 60க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை, ஊட்டி தனியார் புகைப்பட கல்லுாரி செய்து இருந்தது.
இதில், பயிற்சி பெறும், 60 புகைப்பட கலைஞர்கள், விலை உயர்ந்த கேமராக்களை பயன்படுத்தி, போட்டோ எடுப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்த கலெக்டர், இன்னசென்ட் திவ்யா, எஸ்.பி., - முரளி ரம்பா ஆகியோர், ஆதரவற்ற குழந்தைகளுடன், புகைப்படம் எடுத்து மகிழ்வித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X