அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இணைந்தன, ஓ.பி.எஸ்., எடப்பாடி,

சென்னை: அ.தி.மு.க., இரு அணிகள் இணைவது தொடர்பான முடிவை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சும் இணைந்து அதிமுக., தலைமை அலுவலகத்தில் அமர்ந்தனர். இருவரும் கை குலுக்கி வரவேற்றனர். பின்னர் மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்திற்கு சென்று இருவரும் ஜெ., சமாதியில் மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுகவை வழிநடத்தும் வழிகாட்டும் குழு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டன.195 நாட்களுக்கு

இணைந்தன, ஓ.பி.எஸ்., எடப்பாடி,

பின்னர் இரு அணிகள் இணைந்தன. கடந்த பிப் 7 ம்தேதி ஜெ., நினைவிடத்தில் அதிமுக அணி ஓபி.எஸ்., தியானம் மூலம் இரண்டாக உடைந்தது. அன்று முதல் தர்மயுத்தம் துவங்குவதாக ஓ.பி.எஸ்., அறிவித்தார். தொடர்ந்து அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என பிரிந்ததது.தற்போது இரு அணிகள் இணைந்திருப்பதால் ஒன்றுபட்ட அதிமுகவாக மாறுகிறது. இதன்மூலம் கட்சியின் இரட்டை இலை சின்னம் மீட்கப்படும். இரு அணிகள் இணைவது தொடர்பை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகம், ஜெ., நினைவிடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ்., காரில் பலத்த பாதுகாப்புடன் வந்தார். அவரை தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

Advertisement


பாரம் குறைந்து விட்டது; ஓ.பி.எஸ்.,கட்சி நிவாகிகள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எங்களை யாரும் பிரிக்க முடியாது. நாம் அனைவரும் ஜெயலலிதாவின் ஒரு தாய் மக்கள். இணைப்பிற்கு முழு ஒத்துழைப்பு தந்த முதல்வர் பழனிசாமி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றி. இனி வரும் காலங்களில் அனைவரும் ஒன்றாக இருந்து, ஆண்ட கட்சியே மீண்டும் ஆளும் புதிய சரித்திரத்தை உருவாக்கிய ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது. கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டன. இந்த இணைப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றார்.

கனவுகள் தகர்ந்து விட்டன;

ஓ.பி.எஸ்., முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்; ஜெயலலிதா ஆத்மா நிறைவேறும் வகையில் நாம் இணைந்துள்ளோம். 6 மாத காலமாக நாம் பல கஷ்டங்களை சந்தித்துள்ளோம். இந்த இயக்கம் இணைவதற்கு அரும்பாடு பட்ட ஓ.பி.எஸ்., மற்றும் அனைவரது சார்பிலும் அவரது எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக ஒன்றுபட்ட அதிமுக தழைத்து நிற்க ஜெ., எம்.ஜி.ஆர்., கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். பலரது கனவுகள் தகர்ந்து விட்டன. இந்தியாவிலேயே பிரிந்த எந்த கட்சியும் இணைந்தது இல்லை. ஆனால் பிரிந்த அதிமுக மட்டுமே இணைந்துள்ளது என்றார். மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பளராக கே.பி.முனுசாமியும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appu - Madurai,இந்தியா
21-ஆக-201723:07:12 IST Report Abuse

Appu(ஓ பி எஸ்+ஈ பி எஸ் )x பாஜக = இணைந்த அதிமுக...(இணைந்த அதிமுக/டி டி வி) x திமுக=ஆட்சிகவிழ்ப்பு...ஈக்குவேஷன் ரிசல்ட் மறு தேர்தல்=அண்ணன் சீமான் வெற்றி...தமிழகம் தப்பும்.

Rate this:
RAMACHANDRAN RAJARAMAN - AL AIN,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஆக-201722:57:38 IST Report Abuse

RAMACHANDRAN RAJARAMANதர்ம யுத்தம் என்று சொல்லி தர்மத்தை தலைகுனியச் செய்த பாவத்துக்கு நீங்களும் ஆளாகிவிட்டீர்களே ?? பெரும்பான்மை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. இருந்திருந்தால் பொதுதேர்தல் மீண்டும் வந்திருக்கும். ஓ.பி.எஸ் - சும் தர்மரைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கமாட்டார். நதிகள் இணைப்பை விட அணிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வருவதுதான் கொடுமை.. பாவம் தமிழ் மக்கள்..

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
21-ஆக-201722:05:18 IST Report Abuse

muruguமெரினாவில் மக்கள் கூடினால் தவறு ,காவல் துறையை ஏவி தடியடி நடத்துவீர்கள் ஆனால் இருவரும் சேர்ந்து கொள்ளை அடிப்பதற்கு ஒப்பந்தம் செய்ய மெரினாவில் கூடினால் காவல் துறையே ஏவல் துறையாக வேலை செய்யும் அதற்க்கு மீடியாவும் உடந்தையாக இருக்கும் ஐயோகோ என்ன நாடுடா இது ?

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X