Assam to table 2-child population policy in next assembly session | 2 குழந்தைகளுக்கு மேல் கூடாது: அசாமில் வருகிறது புதிய சட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2 குழந்தைகளுக்கு மேல் கூடாது: அசாமில் வருகிறது புதிய சட்டம்

Added : ஆக 22, 2017 | கருத்துகள் (42)
Advertisement
policy,2 குழந்தைகள்,2 child, அசாம், Assam,சட்டம்,Law, கவுஹாத்தி, Guwahati,அசாம் அரசு, Assam Government,  முதல்வர் சர்பானந்த சோனவால், Chief Minister Sarbananda Sonaval,பா.ஜ அரசு, BJP Government, இரண்டு குழந்தைகள், two children,மாநில சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர், Minister of State for Health and Education, ஹிமந்த பிஸ்வா சர்மா, Himanta Biswas Sharma, சட்டசபை, Assembly,பென்ஷன் திட்டம், Pension Scheme, ஹிந்துத்துவா , Hinduthva,தீன் தயாள் உபாத்யாயா ,Deen Dayal Upadhyaya, மக்கள் தொகை, population

கவுஹாத்தி: பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டம் உட்பட, பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, அசாம் அரசு தெரிவித்துள்ளது.


அதிரடி:

அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, மக்கள் தொகை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை, மாநில அரசு எடுத்து வருகிறது. 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது' என, அதிரடியாக அறிவிக்கப்பட்டது.


புதிய சட்டம்:

இந்நிலையில், மாநில சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர், ஹிமந்த பிஸ்வா சர்மா, நேற்று கூறியதாவது: மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வரும், 2018 ஏப்ரல் முதல் அமல்படுத்தும் வகையில், புதிய சட்டம், சட்டசபையின் அடுத்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், அரசுப் பணிகளில் மட்டுமல்ல, அரசின் எந்த சேவையிலும் ஈடுபட முடியாது; கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.


புதிய பென்ஷன்:

பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் முறை கைவிடப்படுகிறது. அதற்கு பதில், அந்தக் குடும்பத்துக்கான புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு, அரசின் நலத் திட்ட பலன்களும் வழங்கப்படாது.


தவறில்லை:

கல்வி திட்டங்களுக்கு, ஹிந்துத்துவா தலைவரான, தீன் தயாள் உபாத்யாயா பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது, அரசியல் ரீதியிலான விமர்சனமே; மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மத்தியில் தற்போது நடப்பது, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசல்ல. எங்கள் சிந்தாந்த தலைவர்களின் வழியின்படியே நாங்கள் நடப்போம்; இதில் தவறேதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
22-ஆக-201712:50:21 IST Report Abuse
anbu இரண்டு மேல் இருந்தால் அரச சலுகைகள், மானியங்கள் நிறுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
22-ஆக-201711:45:06 IST Report Abuse
Nakkal Nadhamuni இந்தமாதிரி ஒரு சட்டம் இந்தியா முழுதும் அவசியம்... மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பட்டு வைத்திருக்க வேண்டும்... இல்லையென்றால் ஒரு நாடு நன்றாக இருக்காது... ஏழைகள் அதிகரிப்பார்கள்... பசி, பஞ்சம், நீர்-உணவு பற்றாக்குறை, வேலையில்லா திண்டாட்டம்... எல்லாமாதிரி பிரச்சனைகளும் உருவாகும்... இதில் ஜாதியோ, மதமோ, பணக்காரன்ஏ-ழை என்ற விஷயங்கள் உள்ளே வரக்கூடாது... எல்லா மாநில முதல்வர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்கவேண்டும்... அரசியல் நிச்சயமாக இருக்கக்கூடாது... இதை செய்யவில்லை என்றால் இது எதிர்கால சந்ததியினரை இன்னும் பெரிதாக பாதிக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Vijay - Chennai,இந்தியா
22-ஆக-201711:23:08 IST Report Abuse
Vijay அருமை. இதை இந்தியா முழுவதும் நடைமுறை படுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X