அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்: தினகரன் நம்பிக்கை

Updated : ஆக 26, 2017 | Added : ஆக 26, 2017 | கருத்துகள் (43)
Advertisement
தினகரன், அதிமுக,  தியாகம், துரோகம், கவர்னர், எம்எல்ஏ

சென்னை: கவர்னர் சிறந்த சட்ட மேதை. அவர் தமிழக அரசியல் நிலை குறித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என தாம் நம்புவதாக தினகரன் கூறினார். இது குறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டி:


பயத்தில் இல்லை:

எனக்கு தொண்டை வலி இருக்கிறது. இதனால் என்னால் அதிகம் பேச முடியாது. நான் சபரி மலைக்கு செல்கிறேன். கடவுளை தவிர வேறு யாரும் என்னை மிரட்ட முடியாது. கடவுளுக்கும் உண்மைக்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள். தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையிலான யுத்தம் நடக்கிறது. தளபதிகளாக, தள கர்த்தகர்களாக 19 பேர் புதுச்சேரி சென்றுள்ளனர். அவர்களை வாங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் அங்கு செல்லவில்லை. 19 பேர் மக்கள் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு அங்கு அமர்ந்துள்ளதால் இத்தனை பேர் வந்து அது பற்றிகேள்வி கேட்கிறீர்கள்.


தியாகத்துடன்:

தமிழகம் மட்டுமல்ல இந்திய துணை கண்டமே தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை உற்று கவனிக்கிறார்கள். கவர்னர் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில் எம்எல்ஏக்கள் அங்கு அமர்ந்துள்ளனர். அமைச்சர் பணம் பாதாளம்வரை பாயும் என்றார்கள். எங்களுடன் இருக்கும் எம்எல்ஏக்களிடம் பணம் பாயாது.அவர்கள் இன்று அந்த அணியில் இருந்திருந்தால் என்ன சலுகை கிடைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியும் .


பாடம்:

என்னுடன் நிற்பவர்கள் நியாயம் தர்மம் பக்கத்தில் இருக்கிறார்கள்.கட்சியை காப்பாற்ற வேண்டும். பொது செயலரை நீக்குவேன் என கூறியவர்களுக்குபாடம் புகட்ட வேண்டும். கவர்னர் சிறந்த சட்டமேதை நல்ல முடிவு எடுப்பார் . கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களேடு இணைந்து செயல்படுகிறேன். இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-201708:00:01 IST Report Abuse
ந.செல்வசேகரன் திமுகாவிடம் கைகோர்த்த மன்னார்குடி மாஃபியா கும்பலின் தலைவி,தினகரன்மற்றும் இவர்களுக்கு துணைபோன எம்எல்ஏக்களை மக்கள்.உண்மைதொண்டர்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள். துணைபோனால் நீங்கள் செல்லாக்காசு.தேமுதிக எம்எல்ஏக்களின் கதிதான்"பேசாமல் 19 பேரும் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சசி-தினகரன் தலைமையில் சந்தியுங்கள் தைரியமாக பார்ப்போம்!
Rate this:
Share this comment
Cancel
26-ஆக-201717:51:39 IST Report Abuse
மோகன் இவர்களுடன் இருக்கும் அமைச்சர்களுக்கு பணம் பாயாது!!!... வண்டி வண்டியா போகும்....
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
26-ஆக-201717:12:52 IST Report Abuse
dandy தியாகம் ?????? மக்களுககு விளங்கவும் ..அனால் குவார்ட்டர் ..பிரியாணி வாங்கும் மாக்களுக்கு விளங்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X