மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு| Dinamalar

மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு

Added : ஜூன் 13, 2010 | கருத்துகள் (9)
மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், 1926ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி பிறந்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா. இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜு. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், வெளியில் தெரியாத ஒரு கிராமமாக இருந்தது புட்டபர்த்தி. ஆனால், தற்போது இக்கிராமத்தில் அமைந்துள்ள சத்ய சாய்பாபாவின் 'பிரசாந்தி நிலையம்' ஆசிரமத்தால், புட்டபர்த்தி என்ற பெயர் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பல்வேறு நாடுகள், மாநிலங்கள், இனம், மதம், கலாசாரம் ஆகியவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள், தினந்தோறும் இந்த ஆசிரமத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த 70 ஆண்டு காலத்தில், பல லட்சக்கணக்கான பக்தர்கள், ஆசிரமத்தின் தங்கும் விடுதி அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் 185 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இந்த ஆசிரமத்திற்கு செல்லும் வழியில், பல்கலைக்கழகம், பள்ளிகள், கல்லூரிகள், இரண்டு பெரிய மருத்துவமனைகள், கோளரங்கம், விமான நிலையம் மற்றும் அருங் காட்சியகம் ஆகியவை அமைந் துள்ளன. அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும்சத்ய சாய் பாபாவின் 'பிரசாந்தி நிலையம்' ஆசிரமத்தில், பக்தர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன.
சத்ய சாய் பாபாவின் தத்துவங்கள், இனம், மதம் அல்லது இடம் ஆகிய அனைத்தையும் கடந்து நிற்கிறது. தன்னலமற்ற சேவை மூலமான சத்ய சாய் பாபாவின் அன்பினால், உலகளவில் ஆயிரக்கணக் கான பக்தர்கள், சத்ய சாய் அமைப்பில் உறுப்பினர் களாக உள்ளனர். இவரது வாழ்க்கை மற்றும் சிந்தனை ஆகியவை மிகவும் ஆற்றல் வாய்ந்தது. இவரது எல்லை கடந்த அன்பு, சர்வதேச அளவிலான அணுகுமுறை மற்றும் இவர் நிகழ்த்திய பல அதிசயங்கள் ஆகியவை, உண்மையில் இவர் யார்? என்ற கேள்வியை பலரும் எழுப்ப காரணமாகியது.
இதற்கு பகவான் சத்ய சாய் பாபா அளித்த பதில்: நானும் கடவுள் நீங்களும் கடவுள். உங்களுக்கும் எனக்கும் <உள்ள ஒரே வேறுபாடு, நான் அதை உணர்ந்திருக்கிறேன்; நீங்கள் அதை உணரவில்லை என்பது தான். நான் யாருடைய நம்பிக்கையையும் அழிக்க வரவில்லை. அவரவர் நம்பிக்கையில், அவரவர் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கிறிஸ்துவன் சிறந்த கிறிஸ்துவனாகவும், முஸ்லிம் சிறந்த முஸ்லிமாகவும், இந்து சிறந்த இந்துவாகவும் திகழ முடியும்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினுள் இருக்கும் ஆன்மாவிலும், கடவுளின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்பதை அவர்களை உணர வைத்து, கடவுளை சென்றடையும் வழியின் மூலம் அவர்களை சகோதரத்துவம் என்ற பிணைப்பின் கீழ், ஒரே குடும்பமாக இணைப்பதே என் குறிக்கோள். அதற்காக நான் வருகை தந்துள்ளேன். உண்மை, நேர்மை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய ஐந்தும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான வழி. கடவுளிடம் அன்பு செ<லுத்துதல், தவறு செய்ய அஞ்சுதல் மற்றும் ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். 'எனது வாழ்க்கை எனது செய்தி', தன்னலமற்ற சேவை மூலம் பாவங்களில் இருந்து விடுபெற முடியும். மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு. இதுவே பகவான் சத்ய சாய் பாபாவின் செய்தி.
உலகின் பல்வேறு நாடுகளிலும், அப்பகுதியில் உள்ள மக்கள் நலனுக்காக, சாய் அமைப்பு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. பொறாமை, லஞ்ச ஊழல், வன்முறை மற்றும் பயங்கரவாதம் போன்றவை பெருகி உள்ள தற்போதைய சூழ்நிலையில், பலரும் பகவான் சத்ய சாய் பாபாவை தங்கள் முன்னுதாரணமாக பார்க்கின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X