உலகம் ஏற்றுக்கொண்ட தலைவர் பிரதமர் மோடி: அமித் ஷா

Added : ஆக 28, 2017 | கருத்துகள் (138)
Advertisement
மோடி, Modi,அமித்ஷா, Amit Shah, அத்வானி,  Advani, விவேகானந்தர், Vivekananda,இந்தியா,India,  வாழ்க்கை வரலாறு, Biography, உலகம்,  World, மும்பை , Mumbai,பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi,  பா.ஜ தேசிய தலைவர் அமித்ஷா ,BJP National President Amit Shah,  ஏக்நாத் காட்சே,Eknath Khatche,

மும்பை : பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்றும், அவரது செயல்பாடுகள் சுவாமி விவேகானந்தரை ஒத்து இருப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மும்பை வந்த அமித் ஷா, மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
விழாவில் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக திகழ்ந்து வருகிறார். மோடியின் தலைமைக்கு, பல்வேறு நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. மோடி, இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாது, 125 கோடி மக்களின் பெருமையாக திகழ்கிறார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தின் போது நாட்டின் கொள்கைகள் பாழ்பட்டு கிடந்தன. அவற்றை, பிரதமர் மோடி, தனது கடின உழைப்பு, திறன்மிகுந்த நிர்வாகம் உள்ளிட்ட நேர்மறை காரணிகளின் மூலம் சீர்செய்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்தி் சென்றுகொண்டுள்ளார் என்று அமித் ஷா கூறினார்.


அத்வானி தலைமை தேவையில்லை :


கட்சியின் முக்கிய தூண் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், இன்றைய நிலையில், அவரால் கட்சியை தற்போதைய நிலையில் திறம்பட நடத்த முடியாது. இதன்காரணமாகவே, கட்சியின் வளர்ச்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் முயற்சியில், கட்சியின் தலைமை, அமித் ஷா போன்ற திறமை மிக்கவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் காட்சே கருத்து தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
30-ஆக-201710:56:54 IST Report Abuse
N.Kaliraj தலைவரின் அடுத்த இலக்கு.....ஐநா சபை....
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
30-ஆக-201710:56:12 IST Report Abuse
N.Kaliraj இது மொய் எழுதுவது போலத்தான்...நான் உங்களுக்கு மொய் வைத்தால் நீங்கள் எனக்கு வைக்க நினைப்பீர்களே அது அதுதான்...
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-ஆக-201723:09:12 IST Report Abuse
Rafi பிரதமர் என்பவர் நாட்டின் பிரதிநிதி அவரை ஒவ்வொரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு தான் அழைப்பு விடுவார்கள். தனிப்பட்ட மோடிஜியை சில நாட்டுக்குள் வர தடை செய்ததை அமித்ஸாஜி மறந்து விட்டார்போலும், மோடிஜியின் சுற்றுப்பயணத்தின் போது அவருடைய ஆட்சியில் சிறுபான்மையினர் பாதிப்படைவதற்கு ஆட்சியாளர்களே காரணமாக இருப்பதாகவும் உலக பத்திரிகைகள் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் செய்திகளை நம் நாட்டு பத்திரிகைகள் தான் இருட்டடிப்பு செய்யும் அந்தந்த நாடுகளில் அந்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கு.
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
31-ஆக-201721:23:41 IST Report Abuse
Sitaramen Varadarajanசிறுபான்மையினர் சகல வசதிகளுடன் வளமாக, வசதியாக, இங்கிருப்பவர்களின் உரிமைகளையும் பறித்துக்கொண்டு, சிறுபான்மை சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லிக்கொண்டே, ஆண்டுகளை ஒட்டி விட்டனர். பெரும்பான்மை உரிமைகளை இழந்து, சொந்த நாட்டிலேயே பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். இதுதான் உண்மை. இந்த அவலம் அரசியலில் அதிகாரபோதையினால் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக உருவானது. அனைவரும் இந்தியர்கள். அனைவருக்கும் அனைவரும் சமம். இருப்பதை சமமாக பங்கீடு செய்து கொள்வதுதான் ஆரோகியமான அமைதியான மார்க்கம். என்ன செய்வது பதவி வெறியர்கள் பழி வாங்கிவிட்டார்கள். பெரும்பான்மை பலிகடா ஆகிவிட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X