அரசியல் செய்தி

தமிழ்நாடு

எல்லாம் ஒரு விளம்பரமே...! எம்.எல்.ஏ.க்கள் அடிக்கும் கூத்து

Added : ஆக 29, 2017 | கருத்துகள் (71)
Advertisement
எம்.எல்.ஏ, MLA, புதுச்சேரி, Puducherry,தினகரன் ,Dinakaran, சொகுசு விடுதி, Luxury Hotel,நட்சத்திர ஓட்டல் ,Star Hotel, ஏழுமலை,Elumalai, கதிர்காமு,Kadhirkamu,  தங்கதுரை ,Thangadurai,  நடைபயிற்சி,  Walking, யோகா,Yoga, நீச்சல், Swimming,

புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 'கம்பு சுத்துவது, டீக்கடையில் டீ குடிப்பது, பைக் ஓட்டுவது' போன்ற நடவடிக்கைகள், 'எல்லாம் ஒரு விளம்பரம் தான்' என்பது போன்று உள்ளது.


கொஞ்சம் ‛ஓவர்':

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், புதுச்சேரி அடுத்த, சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலர், தினமும் நடைபயிற்சி செல்வதை, வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் ஏழுமலை, கதிர்காமு, தங்கதுரை உள்ளிட்ட சிலரது நடவடிக்கைகள் கொஞ்சம், 'ஓவராக' உள்ளது.


போட்டி போட்டு 'போஸ்':

புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ஏழுமலை, தெருவோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். 'நட்சத்திர ஓட்டலில் கிடைக்காத டீயா, வெளியில் கிடைத்து விடப்போகிறது' என, சிலர், 'கமென்ட்' அடித்தனர். இருந்தும், அவரது செயல் பத்திரிகை மற்றும் 'டிவி'க்களில் வந்ததால், மறுநாள் மேலும் சில, எம்.எல்.ஏ.,க்கள் சாலைக்கு வந்து விட்டனர். 'நாய்க்கு பிஸ்கட் போடுவது, டீ குடிப்பது, பேப்பர் படிப்பது' போன்ற நடவடிக்கையில் இறங்கி, பத்திரிகைகளுக்கு போட்டி போட்டு, 'போஸ்' கொடுத்தனர்.


'பந்தா':

சின்ன வீராம்பட்டினம் விடுதிக்கு நேற்று முன்தினம் திரும்பிய அவர்கள், மீண்டும், நடைபயிற்சி, யோகா, நீச்சல், கம்பு சுற்றுவது, பத்திரிகையாளர்களிடம் பைக் வாங்கி ஓட்டுவது என, பத்திரிகைகளுக்கு பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்து அசத்தினர். துவக்கத்தில் ஓரிருவர் மட்டுமே, இந்த நடவடிக்கையில் இறங்க, தற்போது, 'பந்தா' காட்டும், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
29-ஆக-201718:47:30 IST Report Abuse
Ramachandran CV Ramachandran தொகுதி மக்களே நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் குறைதீர்க்கவந்த உங்கள் பிரதிநிதிகளை பாருங்கள். கூவத்தூரில் தங்கி இருந்தவர்களையும் சேர்த்து இந்த மக்கள் பிரதிநிதிகளை மீண்டும் தேர்ந்தெடுத்தால். உங்கள் கதி என்னவாகவும் என்பதை சற்று சிந்தியுங்கள். வெறும் ஆயிரம் ஐநூறுக்கு ஆசைப்பட்டு தவறான முடிவை எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் மீண்டும் இதே கதிதான் ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
29-ஆக-201716:40:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் செந்தில் : அண்ணே ஒரு விளம்பரம் , கவுண்டமணி : என்னடா விளம்பரம் , அந்த MLA கள் தான் விளம்பரம் பண்றாங்க , இவனுங்கதான் மட்டும்தான் டீ குடிக்க பிறந்தாங்களா , நாமெல்லாம் டீ குடிக்கமாட்டோமா ?
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
29-ஆக-201716:21:25 IST Report Abuse
appaavi அப்ப மத்ததெல்லாம் கிடையாதா... அந்த வீடியோக்கள் ரிலீஸ் எப்போ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X