அரசியல் செய்தி

தமிழ்நாடு

உளவு பார்க்கும் பழனிச்சாமி: அதிருப்தியில் பன்னீர்செல்வம்

Updated : ஆக 29, 2017 | Added : ஆக 29, 2017 | கருத்துகள் (48)
Advertisement
பழனிசாமி, பன்னீர், ஜெயக்குமார், உளவு

சென்னை:முதல்வர் பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து நின்று செயல்பட்ட அ.தி.மு.க., அணிகளை சமீபத்தில் ஒன்று சேர்த்தனர். இதனால், தமிழகத்தின் புதிய துணை முதல்வராக பதவி ஏற்றார் பன்னீர்செல்வம்.அதன்பின், இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்வது போல, வெளியில் பெரிதாக காட்டிக் கொண்டு வருகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு. பன்னீர்செல்வம் எங்கு வெளியில் சென்றாலும், அங்கும் முடிந்த மட்டும் தன் விசுவாசிகளாக கருதப்படும், பல அமைச்சர்களையும் கூடவே அனுப்பி வைத்து, எந்த ரகசிய நிகழ்வுகளும் நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார் பழனிச்சாமி.சென்னை, அண்ணா பல்கலையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்திருந்தார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கி இருந்தார்.அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்றார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். வெங்கையா நாயுடுவும், பன்னீர்செல்வத்திடம் நீண்ட நேரம் பேசிய பின் வழியனுப்பி வைத்தார் .எனினும்,பன்னீர்செல்வத்தோடு, பழனிச்சாமியின் தீவிர ஆதரவு அமைச்சர் ஜெயக்குமார் அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும், அவரோடு, யாராவது ஒரு அமைச்சர் செல்ல வேண்டும் என்று பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.இதை அறிந்த பன்னீசெல்வம், பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangaraj - Coimbatore,இந்தியா
30-ஆக-201706:31:35 IST Report Abuse
Rangaraj பன்னீராய் மக்கள் மனதில் இருந்த பன்னீர் இன்று...ஆக மறியதேனோ மணம் வீசிய பன்னீரை துர்நாற்றமெடுக்கும் ... மாற்றிய சாமீ
Rate this:
Share this comment
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
30-ஆக-201704:00:36 IST Report Abuse
Nagercoil Suresh கொளுத்திப்போட்டாச்சா...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-ஆக-201701:10:51 IST Report Abuse
Mani . V பழனிசாமி தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ளவே பன்னீருடன் சேர்ந்துள்ளார். காரியம் முடிந்தவுடன் வெகு விரைவில் கழட்டி விடப்படுவார். அதற்குத்தான் இந்த உளவு பார்க்கும் வேலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X