சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வள்ளுவர் சிலையின் காகிதக்கூழ் கரைந்தது

Added : ஆக 29, 2017 | கருத்துகள் (2)
Advertisement
வள்ளுவர் சிலையின் காகிதக்கூழ் கரைந்தது

நாகர்கோவில்: சாரல் மழையால், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையில், உப்புத்தன்மையை உறிஞ்சுவதற்காக பூசப்பட்டிருந்த காகிதக்கூழ் கரைந்தது.
கன்னியாகுமரியில், கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, உப்புக்காற்றால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்படுகிறது.
நான்காவது முறையாக இப்பணி, ஏப்., 17-ல் துவங்கி, நான்கு மாதங்களாக நடந்து வருகிறது. முதலில் இணைப்புகளில் உள்ள உப்புத்தன்மை மாற்றப்பட்டு, புதிய சிமென்ட் கலவை பூசப்பட்டது. அதன் பின், சிலை முழுவதும் படிந்துள்ள உப்பை உறிஞ்ச காகிதக்கூழ் பூசப்பட்டது. இது, நன்கு உலர்ந்து வரும் போது, சிலையில் உள்ள உப்புத்தன்மையை முழுவதுமாக உறிஞ்சி விடும். ஆனால் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் இந்த மழை சற்று பலமாக பெய்தது. இதனால் சிலையின் ஒரு பகுதியில் இருந்த காகிதக்கூழ் தண்ணீரில் கரைந்து விட்டதால், காகிதக்கூழ் பூசுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இனி வெயில் அடித்த பின், புதிதாக காகிதகூழ் பூசப்படும். அக்., 15ம் தேதிக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
30-ஆக-201711:02:54 IST Report Abuse
அம்பி ஐயர் மக்கள் பணம் எப்படியெல்லாம் கரைகிறது.... வள்ளுவரே கரைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
30-ஆக-201707:58:21 IST Report Abuse
K.Sugavanam சிலை வைக்க ஆனதைவிட அதை பராமரிக்க பல மடங்கு செலவாகும்போல உள்ளதே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X