அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லியில் அரசியல் செய்ய தினகரன் திட்டம்

Updated : ஆக 30, 2017 | Added : ஆக 30, 2017 | கருத்துகள் (57)
Advertisement
தினகரன்,Dinakaran,  கவர்னர் வித்யாசாகர் ராவ்,Governor Vidyasagar Rao,  திவாகரன்,  Divakaran, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், President Ramnath Govind, புதுச்சேரி, Puducherry,ராம்நாத் கோவிந்த்,Ramnath Govind



சென்னை:ஒரு வார காலமாகியும், கவர்னர் வித்யாசாகர் ராவ், தங்கள் தரப்பு கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் தினகரன், இது குறித்து, திவாகரனுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர் கொடுத்த யோசனையின் படி, விரைவில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் டில்லிக்கு அழைத்துச் செல்ல, தினகரன் திட்டமிட்டுள்ளார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரத்தை எடுத்துச் சொல்லி, கவர்னரை, தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளனர்.
புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், இந்த பிரச்னை டில்லி அரசியல் களத்தை எட்டவில்லை என்பதாலேயே, எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்துச் செல்லும் முடிவுக்கு தினகரன் வந்துள்ளார் என கூறப்படுகிறது.
டில்லியில் தங்கும் போது, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் வரிசையாக பத்திரிகையாளர்களை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச வேண்டும் என்று, தினகரன், உத்தரவிட்டிருக்கிறார்.
கவர்னர் மற்றும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே டில்லியில் அரசியல் செய்ய தினகரன் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR - chennai,இந்தியா
30-ஆக-201718:05:14 IST Report Abuse
KUMAR நீங்க டெல்லி போனா மட்டும் உங்க பருப்பு வேகுமாக்கும் ?
Rate this:
Share this comment
Cancel
kavi - pune,இந்தியா
30-ஆக-201717:11:41 IST Report Abuse
kavi தமிழகத்துலையே ஒன்னும் கிழிக்கல இதுல டெல்லி ல ..ஹாஹா
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
30-ஆக-201716:53:26 IST Report Abuse
Sundaram தினகரனால தமிழகத்துலயே அரசியல் செய்ய முடிலயாம் ..இதுல டெல்லிக்கு போய் அரசியல் செய்து சாதிக்க போறாராம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X