ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர்கள் வாக்குவாதம்: சிசு பலி

Added : ஆக 30, 2017 | கருத்துகள் (38)
Advertisement
ராஜஸ்தான், Rajasthan, ஆப்பரேஷன் தியேட்டர்,Operation Theater,  டாக்டர்கள், Doctors,வாக்குவாதம்,Arguments,  மருத்துவமனை, Hospital,  கோரக்பூர், Gorakhpur,கோலார்,  Kolar,

ஜோத்பூர் : ஆபரேஷன் தியேட்டருக்குள், ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த போது டாக்டர்கள் இருவர் வாக்குவாதம் செய்து, சண்டையிட்டு கொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரங்கேறி உள்ளது.
ஜோத்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பெண்ணுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர்கள் இருவர் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதும், அவர்களை அருகில் இருந்த சக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சமாதானம் செய்வதும் நடந்துள்ளது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த டாக்டர்கள் எதற்காக சண்டையிட்டு கொண்டனர் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் டாக்டர்களின் சண்டை காரணமாக, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது.இதையடுத்து, அந்த டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உ.பி., மாநிலம் கோரக்பூர், கர்நாடக மாநிலம் கோலார் ஆகியவற்றில் மருத்துவ அலட்சியத்தால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், ராஜஸ்தானில் நடந்துள்ள இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.MANIMARAN - V.KEERANUR,இந்தியா
30-ஆக-201717:43:21 IST Report Abuse
P.MANIMARAN முட்டாள் docters
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
30-ஆக-201716:09:13 IST Report Abuse
Karuthukirukkan என்ன காரணம் ?? சிந்திக்கும் மக்களே .. இந்த டாக்டர்கள் நீட் எழுத்துல , எழுதி இருந்தா தகுதியான மருத்துவர்கள் , சிறந்த மருத்துவர்கள் கிடைச்சிருப்பாங்க - இப்படிக்கு தேச நேசன் ..
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
30-ஆக-201717:59:51 IST Report Abuse
Nakkal Nadhamuniஉங்க அறிவு கூர்மை ரொம்ப குத்துது... கொஞ்சம் மழுங்க பண்ணுங்க......
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஆக-201715:49:06 IST Report Abuse
Endrum Indian "எதற்காக சண்டையிட்டு கொண்டனர் என்பது தெளிவாக தெரியவில்லை". ஆக மொத்தம் மீடியாவுக்கு வேண்டியது அதை பார்க்கும் எல்லோரையும் எமோஷனலாக உசுப்பேத்தி கடைசியில் வேற செய்தி கிடைத்து விட்டால் அதை மறுபடியும் பெரிது படுத்தி? உண்மை, நடந்தது என்ன, இதை எப்படி தடுத்திருக்க முடியும் என்ற தீர்வோடு செய்தி வரவேண்டும், வெறும் உசுப்பேத்தும் விதத்தில் அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X