அரசியல் செய்தி

தமிழ்நாடு

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தானாக பதவி விலக வேண்டும்: தினகரன்

Updated : ஆக 30, 2017 | Added : ஆக 30, 2017 | கருத்துகள் (68)
Advertisement
தினகரன், Dinakaran,எம்எல்ஏ,MLA, ஓ.பி.எஸ்.,OPS, இ.பி.எஸ்., EPS,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, எடப்பாடி பழனிசாமி ,Edappadi Palaniasamy,  பழனிசாமி, Palanisamy,  துணை முதல்வர் ஓ.பி.எஸ், Deputy Chief Minister OPS,

சென்னை: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தாமாக பதவி விலக வேண்டும். அதற்காக காத்திருப்பதாக தினகரன் கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம். எங்கள் கோரிக்கையே, யார் தன்னை முதல்வராக்கினரோ அந்த பொது செயலரை நீக்குவேன் என்பவர் பதவி விலக வேண்டும்.பதவி வெறியில்பதவி ஆசையில் செயல்படும் நபர், எப்படி துரோக சிந்தனை உடைய நபர் மக்களுக்கு நல்ல முதல்வராக இருக்க முடியும் என்பதே கேள்வி.


செல்லாது:


தன்னை அடையாளம் காட்டிய பொது செயலர் எங்கே இருக்கிறார். தியாகம் செய்து சிறையில் உள்ளார். பதவி வெறியில் முதல்வர் பதவியில் ஒட்டி கொண்டிருப்பவர்கள் மாற்ற வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கை. அவராக விலக வேண்டும் என காத்திருக்கிறேன்.எங்கள் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஸ்லீப்பர் செல்களாக இயங்கி கொண்டுள்ளனர்.
எடப்பாடி, ஓபிஎஸ் பதவி விலகினால் அதற்கு முடிவு வரும். இதற்கு காலம் வரும். முடிவில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். பொதுகுழுவை கூட்டும் அதிகாரம் பொது செயலருக்கு உண்டு. அவரது இடத்தில் நாங்கள் தான் இருக்கிறோம்.அவர்கள் கூட்டும் பொது குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமி தானாக பதவி விலக வேண்டும். அணிகள் இணைந்தாலும் பொது செயலர் சசிதான்.
சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு எம்எல்ஏக்கள் பதில் அளிப்பார்கள். முதல்வரும், துணை முதல்வர் அமைச்சர்களும் மத்திய அரசிடம் தவறான தகவலை கொடுத்து வருகின்றனர். ஓபிஎஸ், தன்னிடம் 8 6எம்எல்ஏக்கள் வருவார்கள் என கூறினார். ஆனால் 8 மாதமாகியும் ஒருவர் கூட வரவில்லை. அவரிடம் இருந்து தான் ஓருவர் அணி மாறினார். துரோகம் செய்தவர் யாராக இருந்தாலும் யாரையும் விட்டுவிட மாட்டோம்.


சரியில்லை:

துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு சரியான ஆட்சி, துரோக சிந்தனை இல்லாத நபர் தேர்வு செய்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். எங்கள் ஆட்கள் சரியில்லை. துரோக சிந்தனையோடு செயல்படுகிறார். பதவியில் இருப்பதற்காக ஊழல் அரசு என சொன்னவருடன் இணைந்துள்ளார். இவர்கள் சரியில்லாத போது அடுத்தவர்களை குறை சொல்வது சரியாக இருக்காது. கட்சி எங்கள் பக்கம் தான் உள்ளது. கட்சியை பலப்படுத்திவிட்டேன். துரோகிகளை நீக்குவது தான் எங்களது வேலை. இவ்வாறு அவர் கூறினார்.


ஆதரவு அதிகரிக்கும்:

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: சேவையாற்ற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வந்தாலும் மகிழ்ச்சி. நாஞ்சில் சம்பத் பேச்சு சுதந்திரத்தை முடக்க அரசு முயற்சி செய்கிறது. தமிழிசையை பயன்படுத்தி நாஞ்சில் சம்பத்தை முடக்க நினைக்கின்றனர். கட்சியில் செயல்படாதவர்கள் நீக்கப்படுகின்றனர். புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அமைச்சர்களாக இருந்தாலும் நீக்கப்படுவார்கள்.
பொது செயலருக்கு நன்றி இல்லாதவர் எப்படி மக்களுக்கு நம்பிக்கையுள்ளவராக முதல்வராக இருப்பார் என்பது எம்எல்ஏக்களின் கேள்வி. 19 எம்எல்ஏக்களாக இருந்தது 21 ஆனது. இன்று 23 ஆகும். இது 35 ஆகும். இந்த வாரத்தில் 40 ஆக அதிகரிக்கும். ஆட்சி கலையுமா எனக்கூற நான் ஜோசியர் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-201721:01:22 IST Report Abuse
ஆசாமி ஏன்னது சசிகலா தியாகம் செய்து சிறை சென்றாரா.
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
30-ஆக-201719:37:28 IST Report Abuse
kuthubdeen தினகரன் எடப்பாடி முதல்வர் ஆனது காலத்தின் கட்டாயம் ....சசி உள்ளே போகாமல் இருந்தால் அவர் தான் முதல்வர் ஆகி இருப்பார் ...புரியுதா. துரோகம் யார் செய்தது என்று அனைவருக்குமே தெரியும் .கட்சியும் முதல்வர் பதவியும் உன் குடும்ப பிடியில் இருக்க வேண்டும் என்று பேராசை பட்டீர்கள் ,இறைவன் வேறு மாதிரி நினைத்து விட்டான் .ஒழுங்காக போன ஆட்சியில் தேவ இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தியது சசி தான் ..பன்னீரை எதற்கு கட்டாய படுத்தி தூக்கினீர்கள் ...அதனால் வந்த பிரச்சினை தான் இது .கட்சியில் ஆயிரம் சீனியர் இருக்கும் போது கட்சியால் நீர்க்க பட்ட உங்களை எப்புடி சசியால் நியமிக்க முடிந்தது .முதலில் மக்களின் மனா நிலையை பாருங்கள் ,,உங்கள் குடும்பத்தையே பெரும்பாலானோர் வெறுக்கிறார்கள் ,,காரணம் அம்மாவின் மரணம் .புரியுதா ....
Rate this:
Share this comment
Cancel
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
30-ஆக-201719:13:17 IST Report Abuse
V Mohan who is this dinakaran what he is to do with TN politics and TN people what is a shame he saying that filthy lady has gone to jail as தியாகி. What a shame on our community when this kind of stupid, brainless idiotic people are allowed to this extent. he provides luxury accommodation and jailed MLA's for tea, bun and money The whole India is laughing at us
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X