தமிழக அரசை கலைக்க முகாந்திரமில்லை: ராஜ்நாத்

Updated : ஆக 30, 2017 | Added : ஆக 30, 2017 | கருத்துகள் (45)
Advertisement
தமிழக அரசு, Government of Tamil Nadu, ஓ.பி.எஸ்.,OPS, இ.பி.எஸ்.,EPS,  ராஜ்நாத்,Rajnath,  தங்கமணி,Thangamani,  வேலுமணி, Velumani, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், Home Minister Rajnath Singh,  அதிமுக,ADMK, தினகரன்,Dinakaran,நிதியமைச்சர் அருண் ஜெட்லி, Finance Minister Arun Jaitley,

புதுடில்லி: தமிழக அரசை கலைக்க முகாந்திரமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் முதல்வருக்கு எதிராக மனு அளித்துவிட்டு புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இது குறித்து கவர்னர் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டில்லி சென்று நேற்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும், இன்று (ஆக.,30) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அமைச்சர்களுடன் சென்ற தம்பிதுரை கூறியுள்ளார்.


உட்கட்சி விவகாரம்:

இந்நிலையில் டில்லி வட்டாரங்கள் கூறுகையில், ராஜ்நாத் சிங் தமிழக அரசு பிரதிநிதிகளிடம் தமிழக அரசை கவிழ்க்க வேண்டிய முகாந்திரமில்லை. தினகரன் ஆதரவு எம்எல்ஏ புகார் உட்கட்சி விவகாரம். இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் ஜனாதிபதி மற்றும் கவர்னரை ஏன் இழுக்க வேண்டும் கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
31-ஆக-201701:59:33 IST Report Abuse
Arachi அப்போ தமிழ் மக்களுக்கு மூளை இல்லைனு சொல்றீங்க
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
31-ஆக-201701:53:48 IST Report Abuse
makkal neethi உள்துறை தவலைக்குள் தான் ஆளுநர் சொம்பு மூழ்கிக் கிடக்கிறது என்பது உலகறிந்த விஷயம்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-201701:09:14 IST Report Abuse
Mani . V ராஜ்நாத்சிங் பாஜக மந்திரி என்று சொன்னார்கள். "உட்கட்சி விவகாரம்" என்று சொல்வதை வைத்து பார்க்கையில் அவர் அதிமுக வின் கொள்கைப் பரப்பு செயலாளர் போல் தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X