பொது செய்தி

இந்தியா

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்'தோல்வி ஏன்? கிரண்குமார் விளக்கம்

Added : ஆக 31, 2017 | கருத்துகள் (20)
Advertisement
'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்', தோல்வி ஏன்? ,கிரண்குமார் விளக்கம்

சென்னை: இன்று (ஆக.,31) விண்ணில் செலுத்திய 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள் தோல்வி அடைந்தது. இதனை இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஏழு செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது. அதன்படி 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 7 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திடீரென தொழில் நுட்ப கோளாறுகாரணமாக தோல்வி அடைந்ததாக தகவல் வெளியானது.


தோல்வி ஏன்?


தோல்வி இது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, செயற்கைகோளுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெப்ப தடுப்பு அமைப்பு சரியாக பிரியாததால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் தோல்வி அடைந்தது. மேலும் ராக்கெட்டின் நான்கு நிலைகளில் 3 நிலைகள் நன்கு செயல்பட்டன. 4-வது நிலையில் வெப்ப தடுப்பு அமைப்பு சரியாக பிரியாததால் செயற்கை கோள் நிலை நிறுத்துவதிலும், தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்ட படி 19- நிமிடத்தில் செயற்கை கோளை நிலை நிறுத்த முடியவில்லை. தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்..

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
01-செப்-201707:25:45 IST Report Abuse
krishnan பரவாயில்லைங்க சார் நெஸ்ட் தடவை பெட்டெர் லக்
Rate this:
Share this comment
Cancel
Chitrarasan subramani - Chennai,இந்தியா
01-செப்-201704:23:54 IST Report Abuse
Chitrarasan subramani Don't worry, it is not big loss to our nation compared with money wasted in the name of demonistation. Without failure we can't achieve any thing in science. citizens all ways with our scientists.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
01-செப்-201703:57:16 IST Report Abuse
Renga Naayagi அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் மோடியாகவே தெரியும் போல இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X