வெளிநாடு போகக் கூடாது : கார்த்திக்கு கோர்ட் கடிவாளம்| Dinamalar

வெளிநாடு போகக் கூடாது : கார்த்திக்கு கோர்ட் கடிவாளம்

Updated : செப் 02, 2017 | Added : செப் 01, 2017 | கருத்துகள் (30)
Advertisement
கார்த்தி சிதம்பரம்,Karthi Chidambaram, லுக் அவுட்,  Look Out, சுப்ரீம் கோர்ட், Supreme Court, ஐ.என்.எக்ஸ் மீடியா, INX Media, அன்னிய முதலீடு, Foreign Investment, வெளிநாடு, Overseas, புதுடில்லி, New Delhi,முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்,Former Finance Minister P Chidambaram, சி.பி.ஐ.,CPI, நோட்டீஸ்,Notice

புதுடில்லி: 'மோசடி வழக்கு தொடர்பாக, விசாரணை நடந்து வருவதால், வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது' என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி. கடந்த, 2007ல், மத்திய அமைச்சராக, சிதம்பரம் இருந்தபோது, அன்னிய முதலீட்டு வாரிய அனுமதியை, ஒரு நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதில், மோசடி செய்ததாக, கார்த்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை, சி.பி.ஐ., ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது. கார்த்தியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகளில் ஈடுபட்டது. பலமுறை, 'நோட்டீஸ்' அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், கார்த்தியை, தேடப்படும் நபராக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வழக்கில், மத்திய அரசின் உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. சி.பி.ஐ., தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், அந்த தடையை ரத்து செய்தது.
இதற்கிடையே, ஆக., 28ல் இரண்டாவது முறையாக, கார்த்தியிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'கார்த்திக்கு எதிராக, தேடப்படும் நபர் என, அறிவிப்பு வெளியிட்டதற்கு, தகுந்த ஆதாரங்கள் உள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை, 11ம் தேதி சமர்ப்பிக்கிறோம்' என, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையில், 'வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்' என்ற, கார்த்தியின் கோரிக்கையை ஏற்க அமர்வு மறுத்துவிட்டது. 'அடுத்த விசாரணையின்போது இது குறித்து முடிவெடுக்கப்படும். அதுவரை, மத்திய அரசு வெளியிட்டுள்ள தேடப்படும் நபர் அறிவிப்பு அமலில் இருக்கும்' என, அமர்வு கூறியுள்ளது.

வாசகர் கருத்து (30)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
01-செப்-201721:09:24 IST Report Abuse
அப்பாவி உலக ஊழல் பட்டியலில் நம்பர் 1 இந்தியான்னு விசாரிச்சு சொல்லியிருக்காங்க...
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
01-செப்-201719:06:09 IST Report Abuse
yaaro சிதம்பரத்தை திட்டும் போது சாதி பெயரை தேவையில்லாமல் நுழைப்பது நாராசமா இருக்கு.
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
02-செப்-201700:38:16 IST Report Abuse
vadiveluதமிழ் நாட்டில் அவாளை மட்டும்தான் குறிப்பிட்டு யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.அது யாருக்கும் நாராசமாக இருப்பதில்லை.சிதம்பரமே தேவைப்படும்போது அதைத்தான் செய்கிறார்.தமிழகத்துக்கு உரிய ஒரு அசிங்கம் இங்குள்ள அனைத்து தலைவர்களாலும் அது கசந்திக்க படுவதே இல்லை....
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
01-செப்-201718:52:38 IST Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) மொதல்ல இவன பிடிச்சு உள்ள போட்டு நொங்கி எடுத்தா தான் சரிப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X