நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அரியலூர் மாணவி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அரியலூர் மாணவி தற்கொலை

Updated : செப் 01, 2017 | Added : செப் 01, 2017 | கருத்துகள் (312)
Advertisement
அரியலூர், நீட் தேர்வு, மாணவி, தற்கொலை, அனிதா

அரியலூர்: நீட் தேர்வை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் வரை போராடிய மாணவி அனிதா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வாய்ப்பு இல்லை:

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அனிதா, 17. இவர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி, சண்முகம் என்பவரின் மகள். பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதாவின் மருத்துவ, 'கட் ஆப்' 196.75. எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த அனிதா, நீட் தேர்வில், 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடந்தால், அனிதாவிற்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடந்தால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


வழக்கு:

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை எதிர்த்து, நளினி சிதம்பரம் உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், எதிர்மனுதாரராக தன்னைச் சேர்க்க, மாணவி அனிதா, மனு தாக்கல் செய்தார். ஆனால், நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று அவர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
உறவினர்கள் கூறுகையில், சிறு வயது முதல் டாக்டர் கனவுடன் அனிதா படித்து வந்தார். அதிக மதிப்பெண் எடுத்தும் சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்தது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. இது தெரிந்திருந்தால் தடுத்திருப்போம். கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்தார். அனிதாவின் வாழ்க்கை பாழாக நீட் தேர்வே காரணம் எனக்கூறினார்.

வாசகர் கருத்து (312)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
03-செப்-201703:11:23 IST Report Abuse
K.Palanivelu ஒவ்வொரு மாணவ,மாணவிக்கும் ஒவ்வொரு கனவிருக்கும்.ஆனால் தகுதிக்கும்,திறமைக்கும் ஏற்றார் போல எதிர்காலம் அமையும்.இதுதான் வாழ்க்கையின் தத்துவம்.சில இடங்களில் அது சருக்கும்போது உறுதியுடன் மனம் தளராமல், தன்னம்பிக்கை இழக்காமலிருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.ஐ.ஏ.எஸ் தேர்வை பத்துதடவை தொடர்ந்து எழுதி வெற்றி வாகை சூடிய ஒடுக்கப்பட்டவர் இனத்தை சேர்ந்தவர் இருக்கும்போது, இந்தப்பெண் அடுத்தவருடம் நீட் தேர்வு விடாமுயற்சியுடன் எழுதியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.அவசரப்பட்டு தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டது துர்பாக்கியவசமானது. இந்தப் பெண்ணின் முடிவுக்கு இந்தப்பெண்ணே பொறுப்பு.இதற்காக அரசை குற்றம் சாட்டிப்பேசுவது சரியல்ல.
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
02-செப்-201700:07:42 IST Report Abuse
K.Palanivelu இது ஒரு கேவலமான கோழைத்தனம்.வருடாவருடம் எத்தனையோ மாணவ,மாணவிகள் அவர்கள் எழுதிய பரிட்சையில் பெயிலாகி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுகிறார்கள்.அதற்காக பள்ளிகளில் பரிட்சையே வேண்டாம் என ரத்து செய்யமுடியுமா?அனிதாவின் தன்னிச்சையான தற்கொலைக்கு நீட் தேர்வை குற்றம்சாட்டி கொந்தளிக்கும் அரசியல்தலைவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
02-செப்-201700:03:23 IST Report Abuse
Prakash JP //காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது... நளினி சிதம்பரம் வாதாடினார்.. // நீட் விவகாரத்தில் தமிழகத்தை நம்பவைத்து கழுத்தை அறுத்தது மத்திய பிஜேபி மோடி அரசு தான்.. ஆம், காங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையில், மாநிலங்கள் விரும்பினால் விலக்கு அளிக்கப்பட்டது.. ஆனால், மோடி பிஜேபி ஆட்சியில் அதை திருத்தி கட்டாயம் என மாற்றினார்கள்.. அப்படி இருந்தும், மத்திய மெடிகல் கவுன்சிலில் சேரவில்லையெனில், இப்போதும் நீட் கட்டாயம் கிடையாது.. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்போதும் நீட் தேர்வு கிடையாது.. இங்கே தமிழ்நாட்டில், திமுக ஆட்சி இருந்தவரை, பின்பு ஜெயா இருந்தவரை, கட்டாய நீட் முறைக்கு கையெழுத்து போடவில்லை.. அவர் அப்பலோவில் அட்மிட் ஆகியவுடன், பிஜேபியின் பினாமி ஓபிஎஸ் & அப்போது அமைச்சராக இருந்த பிஜேபியின் ஒற்றன் மாபா பாண்டியராஜன் இருவரும் சேர்ந்து தமிழ் நாட்டை மத்திய பிஜேபி அரசிடம் அடகு வைத்து கையெழுத்து போட்டார்கள்.. மேலும், நளினி சிதம்பரம் ஒரு தரப்புக்கு ஆஜரான வக்கீல்.. அவ்வளவுத்தான்.. ஆனால், கடைசிவரை நீட்டுக்கு விலக்கு என சொல்லிவிட்டு, தமிழகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன் போன்ற பல மத்திய அமைச்சர்களும் ஆமாம் சாமி போட்டார்கள்... தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமால், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டது மத்திய பிஜேபி மோடி அரசு.. பின்னர், மீண்டும் அவசர சட்டம் கொண்டு வாருங்கள், ஒப்புதல் கிடைக்கும் என சொல்லிவிட்டு, அப்படி இயற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு, செல்லும் என மத்திய அமைச்சகத்துக்கு லீகல் ஒப்பினியன் கொடுத்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், அப்படியே பல்டி அடித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழகத்துக்கு தனியே சலுகை அளிக்கமுடியாது என குட்டிக்கரணம் அடித்தார்... இப்படி நீட் விவகாரத்தில் தமிழகத்தை நம்பவைத்து கழுத்தை அறுத்தது மத்திய பிஜேபி மோடி அரசு தான்.. சும்மா, ஒன்னும் தெரியாமல் அரசியல் பேசக்கூடாது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X